சேனாபதி ஆன் தி வே...இந்தியன் 2 படத்திற்காக மிரள வைக்கும் கமலின் புதிய லுக்

சென்னை : விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கு தயாராகி வருகிறார் கமல்ஹாசன். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 24 ம் தேதி துவங்கப்பட்டது. இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக கமல் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் இருந்து வருகிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் கமல் இந்தியன் 2 ஷுட்டிங்கில் இணைவார் என சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில் வித்தியாசமான லுக்கிற்காக ஹாலிவுட் மேக்அப் மேன்களுடன் கமல் ஆலோசனை செய்து வருகிறார்.மேக்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதில் கமல் மிக கவனமாக பணியாற்றி வருகிறார்.

போஸ்டரில் மிரட்டும் ரசிகர்கள்

போஸ்டரில் மிரட்டும் ரசிகர்கள்

இந்தியன் 2 படத்தை எப்போ முடித்து, படத்தை ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியன் 2 கமல் லுக் போட்டோவை வைத்து கமல் ரசிகர்களும், கட்சியினரும் போஸ்டர்கள் அடித்து கலக்கி வருகின்றனர்.

வைரலாகும் கமலின் புதிய லுக்

வைரலாகும் கமலின் புதிய லுக்

இந்த சமயத்தில் கமலின் புதிய லுக் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தாடி, மீசை இல்லாமல் க்ளீன் சேவாக இருக்கும் கமலின் புதிய லுக் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே போல் படிய வாரிய தலையுடன் இருக்கும் கமலை பார்த்து, இது தான் புதிய சேனாபதியின் லுக்கா என கேட்டு வருகின்றனர்.

இந்தியன் 2 சேனாபதி மிரட்டுறாரே

இந்தியன் 2 சேனாபதி மிரட்டுறாரே

இந்தியன் சேனாபதியை விட, இந்தியன் 2 சேனாபதி லுக் மிரட்டலாக இருக்கும் போலவே. மேக்அப் இல்லாமலே கமல் இப்படி இருக்காரே. இன்னும் முழுசா சேனாபதியை மாறி இருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

விரைவில் சென்னை திரும்பும் கமல்

விரைவில் சென்னை திரும்பும் கமல்

கமல் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாகவும், அதற்கு பிறகு தொடர்ந்து இந்தியன் 2 ஷுட்டிங்கில் தீவிரமாக ஈடுபட உள்ளார். சமீபத்தில் பூஜையுடன் துவங்கப்பட்ட இந்த ஷுட்டிங்கில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக அவர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளது.

விறுவிறுப்பான இந்தியன் 2 ஷுட்டிங்

விறுவிறுப்பான இந்தியன் 2 ஷுட்டிங்

விரைவில் சித்தார்த், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணுவிற்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என இதுவரை அறிவிக்கவில்லை. ஏற்கனவே 40 சதவீதம் ஷுட்டிங் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் 2 எப்போ ரிலீஸ்

இந்தியன் 2 எப்போ ரிலீஸ்

2023 ல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2, ஆர்சி 15 இரண்டு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் முடிக்க டைரக்டர் ஷங்கர் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த சில மாதங்கள் ஷங்கர் செம பிஸியாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. குறுகிய இடைவேளையில் இரு படங்களையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X