»   »  2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்தது... கமலின் தூங்காவனம் "டிரெய்லர்"

2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்தது... கமலின் தூங்காவனம் "டிரெய்லர்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முன்தினம் வெளியான கமலின் தூங்காவனம் டிரெய்லர் இதுவரை சுமார் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தூங்காவனம். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் இப்படம் உருவாகியிருக்கிறது.


தூங்காவனம் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லர் வெளியானது முதல் தற்போது வரை சமூக வலைதளங்கள் அனைத்திலும் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது தூங்காவனம்.இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி இன்னும் முழுமையாக 2 தினங்கள் முடிவடையாத நிலையில் முழுதாக 10 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது தூங்காவனம்.


கமலின் நடிப்பு மற்றும் ஆக்க்ஷன் காட்சிகள் ஆகியவற்றை திரும்பத்திரும்ப பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் இந்த டிரெய்லர் படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Haasan'sThoonga Vanam official trailer has amassed more than a million views within two days (the trailer was launched on Sep 16th at 4:21 PM) coupled with almost 8K likes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil