»   »  இன்று மாலை வெளியாகிறது கமலின் "தூங்காவனம்" டிரெய்லர்

இன்று மாலை வெளியாகிறது கமலின் "தூங்காவனம்" டிரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் டிரெய்லர், இன்று மாலை வெளியாகும் என்று கமலின் பிஆர் நிகில் முருகன் கூறியிருக்கிறார்.

கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், உமா ரியாஸ்கான், ஆஷா சரத் மற்றும் மது ஷாலினி என்று ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தூங்காவனம்.


இந்தப் படம் நவம்பர் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது, ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில் இன்று மாலை சுமார் 4.21 மணியளவில் தூங்காவனம் படத்தின் டிரெய்லர் உலகநாயகன் டியூப் - யூ டியூப் சேனலில் வெளியாகும் என்று கமலின் பிஆர் நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.தனது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தாக கமல் "தூங்காவனம்" படத்தின் டிரெய்லரை இன்று மாலை வெளியிடவிருக்கிறார்.


ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
The trailer of Kamal Haasan's much-awaited "Thoongavanam" will be released on Today (16 September), as a Ganesh Chathurthi treat for the Tamil audience.The news has been confirmed by Kamal Haasan's PR Nikkil Murugan on Twitter. "#Thoongaavanam & #CheekatiRaajyam Trailer will be live by 4.21PM Tomorrow in Ulaganayagan Tube - You tube Channel," he wrote.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil