»   »  நான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமலின் தூங்காவனம் டிரெய்லர்

நான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமலின் தூங்காவனம் டிரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தூங்காவனம் பட டிரெய்லர் சற்று முன்பு வெளியானது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி படத்தின் டிரெய்லரை சரியாக 4.21 மணியளவில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

தற்போது தூங்காவனம் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லர் தாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மேலும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது #thoongavanam படத்தின் ஹெஷ்டேக். டிரெய்லர் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.


கமல்ஹாசன்

கமல்ஹாசன்

வெளிர் நிறங்களில் கோட் சூட் அணிந்து டிரெய்லர் முழுவதும் அதகளப்படுத்தி இருக்கிறார் கமல். மிகவும் அமைதியான முகத்துடன் வரும் கமலின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. டிரெய்லர் முழுவதும் மிகவும் ஸ்டைலிஷாக மிளிர்கிறார் கமல்.


ஆக்க்ஷன் காட்சிகள்

ஆக்க்ஷன் காட்சிகள்

படம் முழுவதும் ஆக்க்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. குறிப்பாக கிஷோர் மற்றும் பிரகாஷ் ராஜ் இருவருடன் கமல் மோதுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.


10 வயது மகன்

10 வயது மகன்

படத்தில் 10 வயது மகனுக்கு தந்தையாக கமல் நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் எனது மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் உங்களைத் தொலைத்து விடுவேன் என்று கூறுகிறார்.


நான் சொன்னா செய்வேன்

நான் சொன்னா செய்வேன்

மேலும் படத்தில் கமல் பேசும் ஒரு வசனம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழ்பெற்று வருகிறது. அந்த வசனம் இதுதான் " நான் சொன்னா செய்வேன்".


த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா இந்தப் படத்தில் கமலை காதலிப்பவரகவும், அவரின் மீதுள்ள காதலை வெளிப்படுத்த முடியாதவராகவும் இயல்பாக நடித்திருக்கிறார். கமலைப் பற்றி அவர் அறிந்து கொள்ளும் இடங்களில் த்ரிஷாவின் கண்கள் வெளிப்படுத்துகின்றன துயரத்தை.


நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் பார்களில் வருவது போன்று டிரெய்லரின் காட்சிகள் உள்ளன. சம்பத், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் என்று அனைவருமே டிரெய்லரில் தலை காட்டியிருக்கின்றனர்.


ஜிப்ரானின் இசை

ஜிப்ரானின் இசை

டிரெய்லர் முழுவதும் இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். பின்னணி இசை மற்றும் காட்சிகளில் ஜிப்ரானின் உழைப்பு தனித்துத் தெரிகின்றது.


கமலுக்கு சமமாக

படத்தில் கமலுக்கு சமமாக வருவது போன்று பிரகாஷ் ராஜின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடைசியில் ஒரு கார் விபத்துக்குள்ளாவது போன்று டிரெய்லர் முடிவடைகின்றது.


மொத்தத்தில் தூங்காவனம் டிரெய்லர் - கமல் ரசிகர்களுக்கு உண்மையான விநாயகர் சதுர்த்தி விருந்தாக மாறியுள்ளது.English summary
The trailer of Kamal Haasan's much-awaited "Thoongavanam" has been released Now as a Ganesh Chathurthi treat for the Tamil audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil