வேட்டையாடு விளையாடு 2 ஷுட்டிங் எப்போ ஆரம்பம்...கெளதம் மேனன் கொடுத்த அப்டேட்

சென்னை : தமிழ் சினிமாவில் படம் இயக்குவதில் தனக்கென தனி ஸ்டையில் வைத்திருப்பவர் டைரக்டர் கெளதம் மேனன். பிரபலமான டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் இவர்.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

கெளதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். சிம்பு, சித்தி இத்னானி நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை துவக்கி உள்ளார் கெளதம் மேனன். இதன் ஒரு பகுதியாக கெளதம் மேனன் பல பேட்டிகளை அளித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கேட்கப்பட்டது.

வேட்டையாடு விளையாடு 2 அப்டேட்

வேட்டையாடு விளையாடு 2 அப்டேட்

வேட்டையாடு விளையாடு 2 படம் பற்றி பேசிய கெளதம் மேனன், படத்திற்கான கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படம் பற்றி கமல் சாருடன் லாக்டவுனுக்கு முன்பே 45 நிமிடங்கள் பேசினேன். அவர் இந்த கதையை கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைத்து, டெவலப் செய்யும் படி கூறினார். தற்போது எனக்கு கதை சொல்ல அவர் நேரம் கொடுக்க வேண்டும்.

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்

கமலிடம் விரைவிலேயே படத்திற்கான முழு கதையையும் சொல்லுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த படத்தின் வேலைகளை துவக்கலாம் என நினைக்கிறேன் என்றார். வேட்டையாடு விளையாடு 2 படம் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் ஷுட்டிங் அப்டேட்டை டைரக்டரே தந்துள்ளார்.

நீளும் கமலின் பட லிஸ்ட்

நீளும் கமலின் பட லிஸ்ட்

2020 ம் ஆண்டே வேட்டையாடு விளையாடு 2 படம் பண்ண போவதாக கெளதம் மேனன் கன்ஃபார்ம் செய்து விட்டார். சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை செப்டம்பர் மாதத்தில் மீண்டும் துவக்க போகிறார் கமல். தற்போது வேட்டையாடு விளையாடு 2 படமும் அவர் நடிக்க உள்ள படங்களின் லிஸ்டில் சேர்ந்துள்ளது.

கதையை செதுக்குறேன்

கதையை செதுக்குறேன்

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் கமல் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தேவர் மகன் 2, விக்ரம் 3 என கமல் நடிக்க உள்ள படங்களின் லிஸ்ட்டில் தற்போது வேட்டையாடு விளையாடு 2 படமும் இணைந்துள்ளது. வேட்டையாடு விளையாடு படத்திற்காக 120 பக்க கதையை தயார் செய்திருப்பதாகவும், கடைசி அரை மணி நேரத்திற்கான கதையை தான் தற்போது செதுக்கிக் கொண்டிருப்பதாகவும் கெளதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X