twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஓவர்சீஸ்லையும் 100 கோடி வசூலை நெருங்கும் விக்ரம்.. 6 நாட்களில் எவ்வளவு?

    |

    சென்னை: வார இறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் பாக்ஸ் ஆபிஸில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டையை உலகளவில் நடத்தி வருகிறது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி விக்ரம் படம் வெளியானது.

    தமிழ்நாட்டில் 90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள விக்ரம் திரைப்படம், உலகளவில் 6 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை இங்கே காண்போம்..

    கைதி படத்துல செத்த அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்துல எப்படி? லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னாரு தெரியுமா?கைதி படத்துல செத்த அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்துல எப்படி? லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னாரு தெரியுமா?

    200 கோடி கிளப்

    200 கோடி கிளப்

    விக்ரம் திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து எலைட் கிளப் ஆன 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 4 ஆண்டுகளாக படம் வராமல் இருந்த நிலையிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பண்ண மேஜிக்கால் கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிடைத்துள்ளது.

    6வது நாள் வசூல்

    6வது நாள் வசூல்

    உலகளவில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 6வது நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் 500 திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் 250 திரையரங்குகளில் தற்போது தொடர்ந்து ஓடி வருவது குறிப்பிடத்தக்கது. 233 முதல் 235 கோடி வரை உலகளவில் இதுவரை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது.

    இந்தியாவில் எவ்வளவு

    இந்தியாவில் எவ்வளவு

    கடந்த 5 நாட்களில் மட்டும் இந்தியளவில் விக்ரம் திரைப்படம் 137.3 கோடி வசூல் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 6ம் நாள் இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் வந்திருந்தால் 147 முதல் 150 கோடியை விக்ரம் படம் நெருங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவுக்கு கமல் படம் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்கி வருகிறார் கமல்.

    தமிழ்நாட்டில் 100 கோடி

    தமிழ்நாட்டில் 100 கோடி

    கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் கடைசி நேரத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டும் சூர்யா என மல்டி ஸ்டார் படமாக உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை 90 கோடி வசூல் செய்திருப்பதாகவும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் 100 கோடியை தமிழ்நாட்டு அளவிலேயே கடந்து இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த கோலிவுட் படமாக விக்ரம் மாறும் என தெரிகிறது.

    Recommended Video

    Vikram பட வெற்றிக்காக நன்றி கூறி 5 மொழிகளில் பேசி வீடியோக்களை வெளியிட்டார் Kamal #Kollywood
    ஓவர்சீஸிலும் 100 கோடி

    ஓவர்சீஸிலும் 100 கோடி

    அமெரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு இணையாக உலகளவில் 85 கோடி வரை 6 நாட்களில் விக்ரம் திரைப்படம் வசூல் செய்துள்ளதாகவும், இரண்டாம் வார இறுதியில் ஓவர்சீஸிலும் 100 கோடி வசூலை கமலின் விக்ரம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kamal Haasan’s Vikram Day 6 Box Office Collection crosses 235 crore all over the world and soon it will collect each 100 crore in Tamil Nadu and Overseas stuns Cinema Industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X