கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா இணைய இதுதான் காரணமா? லீக்கான வீடியோவால் வெளியான ரகசியம்?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் சூர்யா இணைந்திருப்பது உறுதியாகி உள்ளது.

விக்ரம் படத்தில் போலீசார் உடன் சூர்யா நடந்து வரும் அதிரடியான காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்து படக்குழுவுக்கு ஷாக் கொடுத்துள்ளன.

விக்ரம் படத்தில் சூர்யா என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்த யூகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பரபரப்பை கிளப்பிய பத்தல பத்தல

பரபரப்பை கிளப்பிய பத்தல பத்தல

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி வெளியாகிறது. நேற்று வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "பத்தல பத்தல" வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. கமல் பாடலை எழுதி பாடியுள்ள நிலையில், அதில் வரும் ஒன்றியத்தின் தப்பால என்கிற வார்த்தையும் திருடன் கையில் சாவி என்கிற வரிகளும் பூகம்பத்தை கிளப்பி உள்ளன.

கமல் படத்தில் சூர்யா

கமல் படத்தில் சூர்யா

மே 15ம் தேதி விக்ரம் படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி கமல் ரசிகர்களையும் சூர்யா ரசிகர்களையும் சந்தோஷத்தின் உச்சியில் ஆழ்த்தி உள்ளது. மாதவனின் ராக்கெட்டரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில், விக்ரம் படத்திலும் சூர்யா நடித்துள்ளார்.

காட்சிகள் லீக்கானதா

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் நடிகர் சூர்யா செம மாஸாக நடந்து வரும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. விக்ரம் படத்தின் காட்சிகள் தான் அது என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். விக்ரம் படத்தின் ஒரு சில காட்சிகள் லீக்கான நிலையில், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏறகனவே மாஸ்டர் படம் வெளியாகும் முன்னமே அந்த படத்தின் ஓப்பனிங் காட்சிகள் லீக்காகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கமலுடன் சந்திப்பு

மேலும், கமல்ஹாசன் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கசிந்து அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. கமல்ஹாசனை கட்டிப்பிடித்து படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்ற புகைப்படங்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. இந்நிலையில், சூர்யா ஏன் திடீரென இந்த படத்தில் இணைந்தார் என்பது குறித்த சில பேச்சுக்களும் கிளம்பி உள்ளன.

Recommended Video

Blade என்றாலே.. பக்கிரிதானா? சர்ச்சையாகும் பத்தல பத்தல பாடல்! | KamalHaasan - Vikram
யங் கமல்

யங் கமல்

ஏற்கனவே டீ ஏஜிங் கான்செப்ட் முறையில் கமல்ஹாசனை இளமையான தோற்றத்தில் கொண்டு வர லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், அந்த காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்பதால் இளம் வயது கமலாக சூர்யாவை காட்டும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X