»   »  முதலில் எந்திரன் 2, அடுத்தது இந்தியன் 2... ஷங்கரின் மெகா திட்டம்

முதலில் எந்திரன் 2, அடுத்தது இந்தியன் 2... ஷங்கரின் மெகா திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் எந்திரன் 2 படத்தை முடித்த பிறகு இந்தியன் படத்தின் 2 வது பாகம் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குனர்களில் ஏ.எம்.ரத்னத்திற்கு ஒரு தனியிடமுண்டு. கமல் ஹாசன், அஜீத், விஜய் மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களின் வளர்ச்சியில் இவருக்கும் முக்கியப் பங்கிருக்கிறது.

Kamal Haasan - Shankar Joins with Indian 2

சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரத்னம் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஷங்கரை சந்தித்துப் பேசிய ரத்னம் இந்தியன் 2 பற்றி விவாதித்ததாக கூறுகின்றனர்.

இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.ரத்னம் கூறும்போது எந்திரன் படத்தின் 2 வது பாகத்தை முடித்து விட்டு இந்தியன் படத்தின் 2 வது பாகம் தொடங்கப் படும் என்று உறுதி தெரிவித்திருக்கிறார்.

கமல், மனிஷா கொய்ராலா ,கஸ்தூரி, சுகன்யா, மனோரமா மற்றும் கவுண்டமணி நடிப்பில் வெளியான இப்படம் தமிழின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை, மகன் என 2 வேடங்களில் நடித்திருந்த கமலிற்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்தது. ஊழலை எதிர்த்து வயதான கமல் போராடுவது போன்று முதல் பாகம் அமைந்திருந்தது.

இந்தியன் படம் வந்த புதிதில் பட்டிதொட்டியெங்கும் இந்தியன் தாத்தாவின் நடிப்பை பற்றிய பேச்சாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்தியன் 2 படத்தைப் பற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After Rajinikanth's Endhiran 2 Shooting Ended, Kamal Haasan's Indian 2 go on Floors Producer A.M.Rathnam says in Recent Interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil