»   »  ஆஸ்கரில் கலக்கிய பிரியங்கா சோப்ரா.. அசந்து போய் பாராட்டிய கமல்ஹாசன்!

ஆஸ்கரில் கலக்கிய பிரியங்கா சோப்ரா.. அசந்து போய் பாராட்டிய கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியங்கா சோப்ரா அழகுடனும், நம்பிக்கையுடனும் ஆஸ்கர் விருதுகள் விழாவில் காணப்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

88 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா சற்று முன்னர் நடந்து முடிந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க வைத்த இந்த விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு கலக்கினார்.

வெள்ளை நிற உடையில் பார்ப்பவர்களின் மனதை சுண்டியிழுத்த பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசனையும் விட்டு வைக்கவில்லை.

ஆஸ்கர் விருதுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் " ஆஸ்கரின் முதல் விருது ஒளிப்பதிவிற்குக் கிடைத்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்த தி ரெவனன்ட் மற்றும் மேட்மேக்ஸ் 2 படங்களுக்கும் மிகச்சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் அளிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா மிகவும் அழகாகவும், நம்பிக்கையுடனும் காணப்படுகிறார். எனக்கு விருப்பமான நடிகர்கள் பட்டியலில் டாம் ஹார்டி இருக்கிறார்.

ஆனால் இந்தமுறையும் அவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸும் சிறப்பாகவே நடித்தார்" இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.

English summary
Kamal Haasan Tweeted "Priyanka looks confident & lovely.The top of my favourite actors list has Tom Hardy's name on it. Keep rocking Tom".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil