»   »  கமல் கட்சிப் பிரச்சாரத்துக்கு இந்தப் பாடல்கள் கைகொடுக்கக் கூடும்!

கமல் கட்சிப் பிரச்சாரத்துக்கு இந்தப் பாடல்கள் கைகொடுக்கக் கூடும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் பிரச்சரதிற்கு கைகொடுக்கும் பாடல்கள்..!!

அரசியலுக்கு வரும் போது திட்டமிட்ட காய் நகர்த்தலோடு தன் சினிமா ஊடகத்தைக் பயன்படுத்திய வகையில் எம்.ஜி.ஆர் அளவுக்கு இனி யாரும் வர முடியாது. எந்தக் கதைப் பின்னணி கொண்ட படங்களிலும் சமூக நீதி, மக்கள் அபிமானம் கொண்ட பாடல்களைப் புகுத்தியதன் விளைவு பின்னால் கட்சி அரசியலில் இறங்கியபோது அவருக்கு நல்ல அறுவடையாக விளங்க அவை கை கொடுத்தன.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

'நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...', 'காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று...', 'ஏமாற்றாதே ஏமாறாதே...', 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்...', என்று எம்.ஜி.ஆருக்குக் கைகொடுத்த பிரசாரப் பாடல்களாகத் திரையிசை விளங்கியதை ஒரு தனி ஆய்வே செய்யலாம். இதயக்கனி படத்தில் இரட்டை இலை, அண்ணா உருவத்தோடு 'நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...' பாடலைக் காட்சிப்படுத்திய விதத்திலும் ஒரு பொழுது போக்கு சினிமாவிலும் உறுத்தாத பிரசாரத்தை நாசூக்காகக் கொடுத்த வித்தகர்.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் இந்திரா காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கிய போது 'என் தமிழ் என் மக்கள்' என்றொரு முழுப்படத்தையே கட்சிப் பிரசாரத்துக்காக எடுத்தார். தவிர இந்தக் கட்சிக் கொள்கைகளை (?) முன்னிறுத்தித் தனிப்பாடல்களையும் அப்போது வெளியிட்டார்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

கே.பாக்யராஜ் கூடக் கட்சி தொடங்கினார். அவருக்கு 'ஒரு நாயகன் உதயமாகிறான்...' (தாவணிக் கனவுகள்) கை கொடுத்திருக்கக் கூடும். நல்ல வேளை டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க பாடல்களைக் கேட்கவில்லை. 'வாடா என் மச்சி வாழக்காய் பஜ்ஜி' என்று பாட்டிலும் எதிர்க்கட்சிக்குப் பஞ்ச் வைத்திருக்கக் கூடும்.

விஜய்காந்துக்கு 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்...' (பொன்மனச் செல்வன்), 'பாசமுள்ள பாண்டியரு...' (கேப்டன் பிரபாகரன்) உள்ளிட்ட துதிப் பாடல்கள் கை கொடுத்தன.

கார்த்திக் தூங்கிக் கொண்டிருப்பார் பாவம், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமே.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் (!) எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஏராளம் திரையிசைப்பாடல்கள் அவர் படத்திலிருந்து கை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. 'பொதுவாக என் மனசு தங்கம்...' (முரட்டுக் காளை), 'என்னோட ராசி நல்ல ராசி...' (மாப்பிள்ளை), "நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன" (தாய் மீது சத்தியம்), 'ஒருவன் ஒருவன் முதலாளி...' (முத்து) ஆகிய சில சோறு பதம்.

கமல் ஸ்பெஷல்

கமல் ஸ்பெஷல்

கமல் ஹாசனுக்கு இந்த விஷயத்தில் ஒரு கலவையான தேடலாகத்தான் இருக்கும். இருந்த போதிலும் அவரின் படப் பாடல்களில் கட்சிப் பிரசாரத்துக்குக் கை கொடுக்கும் என்று தோன்றிய பாடல்கள் இவை.

1. போட்டா படியுது படியுது (சத்யா)
2. அட புதியது பிறந்தது (தேவர் மகன்)
3. அம்மம்மா வந்ததொரு சிங்கக்குட்டி (பேர் சொல்லும் பிள்ளை)
4. அண்ணாத்தே ஆடுறார் (அபூர்வ சகோதரர்கள்)
5. பாட்டு ஒண்ணு பாடு தம்பி (வறுமையின் நிறம் சிகப்பு)
6. யார் யார் சிவம் (அன்பே சிவம்)
7. கப்பலேறிப் போயாச்சு (இந்தியன்)
8. வருது வருது அட விலகு விலகு (தூங்காதே தம்பி தூங்காதே)
9. தூங்காதே தம்பி தூங்காதே (தூங்காதே தம்பி தூங்காதே)
10. நான் தான் உங்கொப்பண்டா (ராம் லஷ்மண்)
11. நான் வெற்றி பெற்றவன் (விக்ரம்)
12. உன்னால் முடியும் தம்பி தம்பி (உன்னால் முடியும் தம்பி)
13. புஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி)
14. எந்த வேலு ஆனாலும் (மகராசன்)
15. சொர்க்கம் என்பது (நம்மவர்)
16. ராமரானாலும் (ஹேராம்)
17. விளக்கேத்து விளக்கேத்து (பேர் சொல்லும் பிள்ளை)
18. யாரென்று தெரிகிறதா (விஸ்வரூபம்)

- கானா பிரபா

English summary
Here is the list of songs from Kamal films which may use for his party campaign.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil