twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹார்வர்டு பல்கலைக்கழதத்தில் தமிழக பிரச்சனைகளை புட்டு புட்டு வைக்கப் போகும் கமல்

    By Siva
    |

    Recommended Video

    ஹார்வர்டில் தமிழக அரசின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவார் ஆண்டவர்- ரசிகர்கள்.

    சென்னை: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழக பிரச்சனைகள் குறித்து பேசப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் வருடாந்திர இந்திய கருத்தரங்கில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    முன்னதாக அவர் கடந்த 2016ம் ஆண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கமல்

    கமல்

    தமிழ்நாட்டை பாதிக்கும் விஷயங்கள் குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசப் போவதாக கமல் தெரிவித்துள்ளார். ஹார்வர்டில் நான் பேச தேர்வு செய்துள்ள தலைப்பு தமிழ்நாடு என்கிறார் கமல். அவர் வரும் 10ம் தேதி உரையாற்றுகிறார்.

    பாதாளம்

    பாதாளம்

    நம் தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதள பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. இது ஒரு தமிழன் என்பதை தாண்டி ஒரு மனிதனாக என் கவுரவத்தை பாதிக்கிறது என்று கமல் தெரிவித்துள்ளார்.

    வளர்ச்சி

    என் மாநிலம் வளர்ச்சி அடைவதை பார்க்க ஆவலாக உள்ளேன். என் மாநிலம் உயர தேசமும் உயரும் என்கிறார் கமல். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தல் பேச ஆவலமாக உள்ளதாக ட்வீட்டியுள்ளார் கமல்.

    பிரச்சனை

    பிரச்சனை

    சும்மாவே ட்விட்டரில் அதிர விடுவார் ஆண்டவர். ஹார்வர்டில் தமிழக அரசின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவார் என்கிறார்கள் உலக நாயகன் ரசிகர்கள்.

    English summary
    Actor-politician Kamal Haasan will deliver a keynote at the Harvard University on February 10. He will talk about the issues plaguing Tamil Nadu, which he feels has "sunk to the lowest depth".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X