Kamal Haasan: இளையராஜாவிற்கு பாராட்டு விழா: பாடி வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மிகப்பிரம்மாண்ட பாராட்டு விழா இன்று நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்ஃபொனி இசையைப் பாராட்டும் விதமாகவும் இவ்விழா நடத்தப்பட்டது. இதில், இளையராஜா, சிம்ஃபொனி இசைக்குழுவுடன், மீண்டும் தனது சிம்ஃபொனி இசைக் கோர்வையை அரங்கேற்றினார்.
இதில் பேசிய கமல்ஹாசன், இந்த விழாவிற்கு முதல் ஒரு ரசிகனாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களுக்கு பெயர்வைத்த அதே மாண்பு மிகு மனிதர் தான் என் அண்ணா, இளையராஜா அவர்களுக்கும், எனக்கும் பெயர் சூட்டினார்கள். இந்த விழாவில் நான் பேசுவது என்பது எனக்கு எவ்வள பெருமையாக இருக்கும் என்பது, என் அண்ணனுக்கு தெரியும். இந்த இசையானி என் அண்ணனும் தான். அவர்களுக்காக நானே எழுதி ஒரு பாடல் பாட இருக்கிறேன், ஸ்ருதி சேரவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் என்று, ஹேராம் திரைப்படத்தில் வரும்.... நீ பார்த்த பார்வைக்கு நன்றி என்ற பாடலை, இளையராஜாவிற்கான பாடலாக மாற்றி பாடினாடி உரையை முடித்துக்கொண்டார்.

பாராட்டு விழா: பாடி முடித்து கமல்ஹாசன் வர, அவரை இளையராஜா கட்டித்தழுவினார். இதையடுத்து, கமல், இளையராஜாவின் கரத்தை பற்றி முத்தம் கொடுத்தார்.அனைவர் மனதில் இருக்கும் அனைத்தையும் ஒரே ஒரு பாடலில் வெளிப்படுத்திவிட்டார் கமஹாசன். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், இளையராஜா அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கி கௌரவித்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,'அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...' என்ற பாடலை பாடி இளையராஜா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட அனைத்து பாடல்களும் முதல்வரின் விருப்பப் பாடல்கள் ஆகும்.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இளையராஜாவை பாராட்டுவதில் தமிழக அரசு பெருமை அடைகிறது. தமிழர்களின் இதயங்களை இளையராஜா ஆளத்தொடங்கி 50 ஆண்டுகள் ஆகி விட்டது என்றார். தொடர்ந்து பேசிய அவர், மேலும், இளையராஜாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள இளையராஜாவின் ரசிகர்கள் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











