»   »  உத்தமவில்லனுக்கு 24 மணிநேரம் பஞ்சாயத்து செய்த நாட்டாமை… ட்விட்டரில் ரசிகர்கள் நன்றி

உத்தமவில்லனுக்கு 24 மணிநேரம் பஞ்சாயத்து செய்த நாட்டாமை… ட்விட்டரில் ரசிகர்கள் நன்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கடா எல்லாம் ஸ்மூத்தா போயிட்டு இருக்கே... படம் வேற ரிலீஸ் ஆகப்போகுதுன்னு சொல்றாங்களே என்று அங்கலாய்த்தனர் சிலர். இதோ நாங்க இருக்கோம் என்று சிலர் கமல் படத்தை எரித்தனர். படத்தின் போஸ்டரையும் எரித்தனர்.

இந்த வௌம்பரம் எல்லாம் பத்தாதே... இன்னும் ஒங்கக்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்றும் சிலர் கூறினர். ஒருவழியாக படம் மே 1ஆம் தேதியும் வந்தது. ரசிகர்கள் தாரை தப்பட்டைகள் கிழிய தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.

காலைல 4 மணியில இருந்தே தலைவரை பார்க்க காத்திட்டு இருக்கேன் என்று புல்லரிக்க பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தனர். இதோ அதோ என்றனர் ஆனாலும் படம் ரிலீஸ் ஆன பாடில்லை.

ஒருவழியாக நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி தாணு, இன்ன பிறர் தலைமையில் பஞ்சாயத்து நடைபெற்றது. ஊடகங்களில் எல்லாம் ஒரே உத்தமவில்லன் பேச்சுதான். இதோ படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிவிட்டது. இதற்கு ட்விட்டரில் ரசிகர்கள் நன்றி கூறியுள்ளனர்.

சரத்குமாருக்கு நன்றி

தொடர்ந்து 24 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்ட சரத்குமாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

நிகில் முருகன் நன்றி

பட ரிலீஸ் பிரச்சினையில் சோர்வடையாமல் தங்களுக்கு ஆதரவாக நின்ற ஸ்டூடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜாவிற்கு ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார் நிகில் முருகன். பட ரிலீஸ் தாமதத்திற்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

ரியல் ஹீரோப்பா

இந்திய சினிமாவில் சரத்குமார் ரியல் ஹீரோ என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

கமல் வந்தார் கிக் ஸ்டார்ட்

படம் ரிலீஸ் ஆனதையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். கமல் வந்த உடன் உத்தமவில்லன் கிக் ஸ்டார்ட் ஆகியுள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

English summary
Fans celebrates twitter for UttamaVillan release. With reports emanating that the movie finally cleared all the hurdles, fans started pouring into theatres with smiles and relief on their faces..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil