Bigg Boss Tamil 6 Grand Finale: எனக்கு பிடிச்சது தமிழ்நாடு.. தமிழகம் கூட இல்லை.. கமல் பளிச்!
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த சீசன் போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அதற்கு நடுவே கமல் இந்த சீசன் போட்டியாளர்களுடன் பேசிய கலந்துரையாடலில் மீண்டும் தமிழ்நாடு முழக்கம் ஒலித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தமிழகம் என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதில் இருந்தே இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாட்டில் பல பெண்களும் தமிழ்நாடு கோலம் போட்டு பதிலடி கொடுத்து வந்தனர்.
டிடி நீலகண்டன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற போது கூட விக்ரமனை வைத்து தமிழ்நாடு பெருமைகளை பேச வைத்திருந்தார். இந்நிலையில், கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தமிழ்நாடு பற்றி உரக்க பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு லட்சம் நன்கொடை
13 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அமுதவாணன் சம்பளமாகவும் 15 லட்சத்துக்கு மேல் வாங்கி உள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் உடன் பேசும் போது ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நல்ல காரியம் செய்வதற்காக ஒரு லட்சம் தர முனைகிறேன் சார் என கமலிடம் சொல்ல அவரை கமல் பாராட்டினார்.

அசல் கேள்வி
அமுதவாணனை தொடர்ந்து கமலிடம் கலந்துரையாடிய அசல் கோலார் மெட்ராஸ்னு பேர் இருக்கும் போதும் நீங்க நடிச்சிருக்கீங்க, சென்னைன்னு பேர் மாறிய போதும் நீங்க நடிச்சிருக்கீங்க உங்களுக்கு எது சார் ரொம்ப பிடிச்ச பேர் என கேட்க உடனடியாக தமிழ்நாடு தான் என அழுத்தம் திருத்தமாக கமல் சொல்லி கிடைத்த கேப்பில் சிக்ஸர் விளாசி விட்டார்.

தமிழகம் அல்ல தமிழ்நாடு
தமிழகம் கூட அல்ல தமிழ்நாடு தான் எனக்கு பிடித்தது. தூத்துக்குடியை டுட்டிக்கொரின் சொன்னால் பிடிக்காது திருச்சிராப்பள்ளியை ட்ரிச்சின்னு சொன்னா பிடிக்காது. அது போல நம் தமிழ்நாட்டை எப்போதுமே தமிழ்நாடு என்று தான் சொல்ல வேண்டும் என பிக் பாஸ் மேடையில் மீண்டும் தமிழ்நாடு பெயர் ஓங்கி ஒலிக்கும் விதமாக கமல் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விக்ரமனும் சொல்லியிருந்தார்
முன்னதாக டிடி நீலகண்டன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற போது கூட விக்ரமனை வைத்து தமிழ்நாடு பெருமைகளை பேச வைத்திருந்தார். இந்நிலையில், கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தமிழ்நாடு பற்றி உரக்க பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











