twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படி செஞ்சா.. மல்லாக்கப் படுத்துக்கிட்டு துப்புறேன்னு அர்த்தம்.. விக்ரம் வெற்றி விழாவில் கமல்!

    |

    சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 350 கோடி ரூபாயை உலகளவில் நெருங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் 75 கோடிக்கும் அதிகமாக ஷேர் கிடைத்திருப்பதாக நேற்று நடந்த விக்ரம் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டார்.

    இந்நிலையில் விக்ரம் விழாவில் பேசிய கமல்ஹாசன் தளபதி 67 படம் பற்றி பேசியது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

    “ விக்ரம்“ வெற்றிக்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ் !“ விக்ரம்“ வெற்றிக்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ் !

    350 கோடி வசூல்

    350 கோடி வசூல்

    விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 15 நாட்கள் ஆகி உள்ள நிலையில், 350 கோடியை நெருங்கி அதன் வசூல் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 346 கோடி ரூபாயை ஒட்டுமொத்தமாக விக்ரம் படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று நடந்த விக்ரம் வெற்றி விழாவில் வெளிநாட்டில் மட்டும் 100 கோடி வசூலை விக்ரம் அள்ளி இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்து விட்டனர்.

    நம்பர் ஒன்

    நம்பர் ஒன்

    இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி நம்பர் ஒன் இடத்துக்கு விக்ரம் திரைப்படம் அசைக்க முடியாத சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பெரும் பட்ஜெட்டில் உருவாகி உள்ள நிலையில், அந்த படம் விக்ரம் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதுவரை புரமோஷன் ரீதியாக பொன்னியின் செல்வன் வேலைகள் ஆரம்பிக்காத நிலையில் அதன் ரிலீஸ் செப்டம்பர் 30 குறிப்பிட்டதை போல வருமா? என்பதிலேயே சந்தேகம் உள்ளது.

    வெற்றிக்கு நான் மட்டும் காரணமில்லை

    வெற்றிக்கு நான் மட்டும் காரணமில்லை

    கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெளியான படம் விக்ரம் மட்டும் தான் என்று பேசிய கமல், இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே காரணம் எனக் கூறமாட்டேன். ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பு தான் விக்ரம் படத்திற்கு இப்படியொரு வசூல் வேட்டையை பெற்று தந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் மேடையில் பேசினார்.

    அதுவும் என் படம் தான்

    அதுவும் என் படம் தான்

    விக்ரம் படத்தை மட்டுமின்றி விக்ரம் 3 பற்றியும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கவுள்ள தளபதி 67 படம் பற்றியும் பேசியிருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள அடுத்த படமும் என் படம் தான் என பேசினார் கமல். அந்த படத்தை முடித்து விட்டு அதற்கு அடுத்து லோகேஷ் இயக்கவுள்ள விக்ரம் எப்படி இருக்கும் என நீங்களே பாருங்கள் என ஹைப்பை எகிற விட்டுள்ளார்.

    மல்லாக்கப் படுத்துக்கிட்டு துப்புறேன்

    மல்லாக்கப் படுத்துக்கிட்டு துப்புறேன்

    என் படத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும், அடுத்த படம் பற்றி பேச மாட்டேன் என நான் நினைத்தால் அது நான் மல்லாக்க படுத்துக்கிட்டு துப்புறேன்னு அர்த்தம். அதுவும் என் படம் தான். அந்த படத்தை இயக்க ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை பற்றி கமல் பேசியதும் அரங்கமே அதிர்ந்தது.

    English summary
    Kamal Haasan talks about Thalapathy 67 and Vikram 3 at Vikram success bash makes Vijay fans very happy. Kamal Haasan also promises to Lokesh Kanagaraj if any help needs for Thalapathy 67, i will ready to help.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X