twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும்.. கமல்ஹாசன் கண்ணீர் மல்க அஞ்சலி!

    |

    சென்னை : பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என்ற நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    Recommended Video

    Pratap Pothen உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் Kamal Haasan

    நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதாப் போத்தன் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    ஓவியா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் சின்னத்திரைக்கு வராங்க.. என்ன நிகழ்ச்சி தெரியுமா? ஓவியா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் சின்னத்திரைக்கு வராங்க.. என்ன நிகழ்ச்சி தெரியுமா?

    பிரதாப் போத்தன்

    பிரதாப் போத்தன்

    நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து,இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, 1990-ம் ஆண்டு அமலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு. 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

    நேரில் அஞ்சலி

    நேரில் அஞ்சலி

    சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியே வசித்து வரும் பிரதாப் போத்தன். இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதாப் பேத்தன் இறந்த செய்தியை கேள்விபட்ட மணிரத்னம் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பிசி ஸ்ரீராம், ராஜீவ் மேனன், நடிகை கனிகா, நடிகை பூர்ணிமா,ஒய்ஜி மகேந்திரன், கருணாஸ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    கமல் அஞ்சலி

    கமல் அஞ்சலி

    இதையடுத்து, மறைந்த நடிகர் இயக்குனர் பிரதாப் போத்தன் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் பிரதாப் போத்தனை அவரது அண்ணன் ஹரி மூலமாகத்தான் தனக்கு தெரியும். அப்போது பிரதாப் பேத்தன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். மிகத் திறமையான நடிகர். அதை பார்த்து நானும், அனந்துவும் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா வாய்ப்பு கேட்டோம். அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்று தெரிவித்தார்.

    முழு திறமையும் வெளிவராமல்

    முழு திறமையும் வெளிவராமல்

    மிகச் சிறந்த எழுத்தாளர், நடிகர் பிரதாப் போத்தன். அவருடைய முழு திறமையும் வெளிவராமல் போனது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அதேபோல இயக்குநர் மணிரத்னமும், பிரதாப் போத்தன் என்னுடைய நீண்டநாள் நண்பர் நல்ல திறமைசாலி இவருடைய இழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியிருந்தார்.

    English summary
    Kamal Haasan tearful tribute to director prathap pothan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X