நாயகன் மீண்டும் வர்றார்...உதயநிதியை தயாரிக்கும் கமல்ஹாசன்

சென்னை : விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல் தலைவர் என பல பரிமாற்றங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். முதல் படமே ஹிட்டானதால் பல படங்களில் நடிக்க துவங்கினார்.

இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நிறுவனம் பெரிய ஸ்டார்களின் படங்களை மட்டும் வெளியிட்டு வந்தது, பிறகு தயாரிக்கவும் செய்தது.

தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள பெரும்பாலான படங்களை கைப்பற்றி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

உதயநிதியுடன் கைகோர்க்கும் கமல்

உதயநிதியுடன் கைகோர்க்கும் கமல்

இந்த விழாவில் அமீர்கானுடன் ஒன்றாக மேடைக்கு வந்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படம் ராஜ்கமல் ஃபிலிம்சின் 54 வது தயாரிப்பாகும்.

 15 ஆண்டு கொண்டாட்டம்

15 ஆண்டு கொண்டாட்டம்

இந்த தகவலை ட்விட்டரில் போட்டோவுடன் பகிர்ந்த உதயநிதி, 15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெளரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மாறி மாறி பாராட்டு

மாறி மாறி பாராட்டு

சமீபத்தில் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டது. இதனால் படத்தின் வெற்றிக்காக உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கமல். இதற்கு பதிலாக கமலுக்கு பெரியார், அம்பேத்காரின் சிறிய சிலைகளை கமலுக்கு பரிசாக வழங்கினார்.

ஒரே நேரத்தில் 2 படங்கள்

ஒரே நேரத்தில் 2 படங்கள்

அதே போல் உதயநிதி கடைசியாக நடித்திருந்த நெஞ்சுக்கு நீதி படத்தையும் கமல் பாராட்டி இருந்தார். படம் பற்றிய தனது உணர்வுகளையும் பகிர்ந்திருந்தார். உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படம், மகிழ் திருமேனி இயக்கும் கழக தலைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X