ஆதாம் எங்கிருக்காரு.. மீண்டும் கமல்ஹாசனை மொக்கைப் பண்ண ஜிபி முத்து.. தெறிக்கும் புரமோ 2!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, "என்ன ஒருத்தரையும் காணுமே எனக்கு பயமா இருக்குமே" என பயந்த நிலையில், உங்களுக்கே இப்படின்னா அப்போ ஆதாமுக்கு எப்படி இருந்துருக்கும் என கமல் வழக்கம் போல தத்துவமாக பேச நினைக்க, "ஆதாமா அது யாரு" என ஜிபி முத்து பதிலுக்கு கேட்ட உடனே 6வது சீசன் மீது அனைவரது கவனமும் திரும்பியது.
கமல்ஹாசன் பைபிளில் வரும் ஆதாம் ஏவாள் பற்றி ஜிபி முத்து பேசியது சரியல்ல என தனியாக ஏகப்பட்ட விவாதங்களே ஓடின.
ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்தன. இந்நிலையில், முதல் வாரத்தில் ஜிபி முத்துவை மீண்டும் வறுத்தெடுக்க நினைத்து அதே பிரச்சனையை கிளப்பி கமல் மொக்கை வாங்கி உள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கமல் எபிசோடு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், ஒரு வாரம் விறுவிறுவென ஓடி விட்டது. முதல் வாரமே 40வது நாள் போல வீடு அனல் பறக்குதே இந்த சீசனில் என முதல் புரமோவிலேயே கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 6க்கான பில்டப்பை எந்த அளவுக்கு ஒரு தொகுப்பாளராக கொடுக்க முடியுமோ கொடுத்து ஆரம்பித்தார். ஆனால், முதல் புரமோவில் ஒன்றுமே இருக்காது என்பது தொடர்ந்து பிக் பாஸ் பார்த்து வரும் ரசிகர்களுக்கு தெரிந்த நிலையில், அதை பெரிதாக யாருமே கண்டு கொள்ளவில்லை.

2வது புரமோ
2வது புரமோவில் தான் ஏதாவது கச்சேரி இருக்கும் வாங்க பார்க்கலாம் என புரமோ வெளியான உடனே பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே அவர்கள் எதிர்பார்த்ததை போலவே சாந்தியின் உப்புமா குறித்து கமல் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கொஞ்சம் ஏமாந்தா உங்களுக்கே உப்புமா போட்டுடுவாங்கன்னு கமல் சொல்ல அரங்கமே சிரித்தது.

முட்டிக் கொள்ளும் மகேஸ்வரி
யாரை பார்த்தாலும் மகேஸ்வரி முட்டிக் கொள்கிறார் என்பது போல ஆரம்பித்த கமல், கண்ணாடியில் நீங்க அடிக்கடி முட்டிக்கிறீங்களாம் அதைத்தான் சொன்னேன் என அவரிடம் தேவையில்லாமல் வாய் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பது போல எஸ்கேப் ஆகி விட்டார். 2வது புரமோவில் விஜே மகேஸ்வரி அணிந்திருக்கும் உடையை பார்த்து ஒரு பக்கம் ரசிகர்கள் கிறங்கிப் போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பாதாம் ஆதாம்
ஜிபி முத்து நீங்க எந்திரிங்க என கமல் சொன்னதுமே.. பாதாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜிபி முத்து சார் பாதாம் சாப்பிடுறீங்களா எனக் கேட்க (ஸ்க்ரிப்டட் மாதிரியே தெரியுதே) பாதாமை விடுங்க ஆதாம் தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே என மீண்டும் அதே பஞ்சாயத்தை கிளப்பினார் கமல்ஹாசன்.

மொக்கை வாங்கிய கமல்
ஆதி மனிதன் என சொல்லப்படும் ஆதாம் பற்றி கமல்ஹாசன் மீண்டும் ஜிபி முத்துவிடம் பேச, அதாமா? அவரு எங்க இருக்காரு என வெள்ளந்தியாகவே கேட்டு கமலை மீண்டும் மொக்கைப் பண்ணி விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். கமல் எப்படியோ இன்றைய எபிசோடில் ஜிபி முத்துவுக்கு புரிய வைத்து விடுவது போல முடித்து விடுவார்கள் பார்ங்களேன் என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தனலட்சுமி பஞ்சாயத்து எங்கேப்பா
2வது புரமோவிலேயே ஜிபி முத்து தனலட்சுமி பஞ்சாயத்து வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். 3வது புரமோவில் தான் தனலட்சுமி பிரச்சனையை கமல் கையில் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அடுத்த புரமோவிலும் ஏமாற்றி விட்டால், இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்து கொண்டு பிக் பாஸ் எடிட்டரும் அந்த காட்சிகளை இடம்பெற செய்வார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











