»   »  ரஜினி ரசிகர்களுக்கு முக்கியமான நாளில் பரபரப்பு ட்வீட் போட்ட கமல்

ரஜினி ரசிகர்களுக்கு முக்கியமான நாளில் பரபரப்பு ட்வீட் போட்ட கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் ஒரு நாள் முன்பே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் அரசியல் பேசி தெறிக்க விட்டு வந்தார். விஸ்வரூபம் 2 பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தற்போது ட்விட்டர் பக்கம் அவ்வளவாக வருவது இல்லை.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கமல் ஏதாவது ட்வீட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ட்வீட் போடவில்லை.

பணப் பட்டுவாடா

பணப் பட்டுவாடா

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததை கண்டித்து கமல் ஹாஸன் நிச்சயம் ட்வீட் போடுவார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்தனர்.

வாழ்த்து

அரசியல் ட்வீட்டை எதிர்பார்த்த நேரத்தில் கமல் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.'

புத்தாண்டு

புத்தாண்டு

புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் அதிலும் 'இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்' என நச்சுன்னு அரசியலை வைத்து சொன்னாருல்ல அது தான் ஆண்டவர் என்கிறார்கள் கமல் ரசிகர்கள்.

வாங்க ப்ளீஸ்

ஆண்டவரே..உங்கள் பக்கத்தில் இருக்கும் இரு குழந்தைகளை பாருங்கள்..ஒன்று சாதியினால் வாழ்க்கையை தொலைத்த பெண்...மற்றொன்று நீட் தேர்வினால் உயிரை தொலைத்த பெண்..இந்த சமுதாயத்தை மாற்ற தயவுசெய்து வாருங்கள் அரசியலுக்கு என ஒருவர் கமலின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Kamal Haasan has wished everyone a happy new year. As Rajinikanth is expected to make announcement about his political entry, Kamal has wished people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X