Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
‘விக்ரம் சாதனை’..ஒரு வார வசூலில் இவ்வளவு விஷயங்களா?
சென்னை : விக்ரம் படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை எட்டிவிட்ட நிலையில் தமிழகத்தில் அதிக வசூலை வாரிக்குவித்து வருகிறது.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விக்ரம் படம்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஓடிடியில்
'விக்ரம்'
ரிலீஸாகும்
போது
அந்த
சீன்
இருக்கும்...படக்குழு
வெளியிட்ட
சுவாரசியத்
தகவல்
!

விக்ரம்
விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் தரமான படமாக விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரமில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன்,மைனா நந்தினி, ஷிவானி நாராயணன், அர்ஜூன் தாஸ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் மெர்சல் காட்டி உள்ளனர்.

கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டும் உடல் மொழி என பட்டையை கிளப்பி இருந்தார். அதே போல பஃகத் பாசில் ரகசிய போலீசாக வந்து காட்சிக்கு காட்சி பிரம்மிக்கவைத்து இருந்தார். யார் நடிப்பையும் குறைசொல்லும் அளவுக்கு மைனஸ் என்பதே இல்லை. இதனால் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சம்பளம் பெறவில்லை
சிறப்பு தோற்றத்தில் வந்து மிரட்டிய சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்த கேரக்டரையே தனி படமாக எடுக்க வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். விக்ரம் படத்தில் நடிப்பதற்காக சூர்யா சம்பளம் ஏதும் பெறவில்லை என்று தகவல்கள் வெளியானது

ரூ. 100 கோடி வசூல்
இந்நிலையில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை செய்து வரும் கமலின் விக்ரம் பாக்ஸ் ஆஃபீஸ் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 200 கோடியை எட்டிவிட்ட நிலையில், விக்ரம் படம் வெளியான ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.. 2022-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படத்தில் விக்ரம் அதிக வசூலை குவித்த படமாக உருவெடுக்கும் என வர்த்தக ஆலோசகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.