தாயாகிய ஆதாரமே...அன்னையர் தினத்தில் உருகிய கமல்

சென்னை : அன்னையர் தினத்தை முன்னிட்டு கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மிக நெகிழ்ச்சியாகவும், உருக்கமாகவும் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கமலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

தனது தாயுடன் எடுத்துக் கொண்ட பழைய ஃபோட்டோவை பகிர்ந்துள்ள கமல், தாயை போற்றி ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதிய வரிகள் பலரையும் கவர்ந்துள்ளது. கமலின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Kamal Haasan wishes fans on Mothers Day

ஆங்கிலத்தில் கமல் எழுதிய பதிவில், அம்மா என்பவர் சாதாரண நபர் அல்ல. என் மனதில் உணர்வாய் இருந்து என்னை சரியான பாதையில் வழிநடத்திச் செல்பவர். ஒவ்வொரு நாளும் என்னுடன் இருப்பாள். இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கமல் எழுதி உள்ள வரிகளில், என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே ....நானாகிய நதி மூலமே...தாயாகிய ஆதாரமே என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் கடைசி வரை போராடி தோல்வி அடைந்தார் கமல். அரசியலில் பல நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் மற்றொரு புறம் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பாதிப்பின்றி எவ்வாறு படப்பிடிப்பை நடத்துவது என படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Kamal Haasan wishes fans on Mothers Day

அதே சமயம் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை விரைவில் முடிப்பதாக ஷங்கர் கோர்ட்டில் தெரிவித்துள்ளதால், இந்த படத்தின் வேலைகளும் சீக்கிரம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X