Don't Miss!
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- News
ட்ரோன் இயந்திரங்களால் கொசு ஒழிப்பு! சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
டிஆர்பியில் அடி வாங்கிய பிக் பாஸ்... நெட்டிசன்கள் ட்ரோல்... எண்ட் கார்டு போட ரெடியான கமல்?
சென்னை:
விஜய்
டிவி
தயாரிப்பில்
கமல்ஹாசன்
தொகுத்து
வழங்கும்
பிக்
பாஸ்
நிகழ்ச்சி,
தற்போது
6வது
சீசனில்
அடியெடுத்து
வைத்துள்ளது.
அக்டோபர்
9ம்
தேதி
தொடங்கிய
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி,
ஜனவரியில்
முடிவுக்கு
வரவுள்ளது.
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சிக்கு
ரசிகர்களிடம்
இதற்கு
முன்பு
இருந்த
வரவேற்பு
இல்லை
என
தகவல்
வெளியாகியுள்ளது.
பிக்
பாஸ்
வீட்டில்
ரூல்ஸ்
மீறப்படுகிறதா?
அமுதவாணனை
அழ
விட்ட
கமல்ஹாசன்!

விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னர்
ஹாலிவுட் நட்சத்திரங்களால் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவிலும் என்ட்ரியானது. முதலில் பாலிவுட்டில் தொடங்கிய பிக் பாஸ், இப்போது 16வது சீசன்களை கடந்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகர்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோரு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். தமிழில் 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ், இப்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னராக கலக்கி வருகிறது.

ரேட்டிங்கில் அடி வாங்கிய பிக் பாஸ்
ஆரம்பத்தில் டிஆர்பியில் ரேட்டிங்கை பொளந்துக் கட்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த சீசனில் இருந்து தரைதட்டிய கப்பலாக தடுமாறி வருகிறதாம். இருப்பதிலேயே இந்த சீசன் ரொம்பவே போரிங் என கமல்ஹாசனே சில வாரங்களுக்கு முன்னர் போட்டியாளர்களிடம் பேசியிருந்தார். கமல் தொகுத்து வழங்குவதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போது ரேட்டிங் குறைந்ததுடன், கமலின் சில தீர்ப்புகளை நெட்டிசன்களும் ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர். அதுமட்டும் இல்லாமல் ஹாட்ஸ்டாரில் 24*7 என 24 மணி நேரமும் பிக் பாஸ் லைவ் செய்யப்படுவதால் சுவாரஸ்யமும் குறைந்துவிட்டதாம்.

கமல்ஹாசன் அதிரடி முடிவு
இதனிடையே விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த கமல், இப்போது இந்தியன் 2, மணிரத்னம் படம் என நடிப்பிலும் பிஸியாகி விட்டார். மேலும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலும் நடைபெற உள்ளது. நடிப்பு, அரசியல் என அடுத்தடுத்து அதிகமான கமிட்மெண்ட்ஸ் உள்ளதால், கமல்ஹாசன் அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி, சீசன் 6 முடிந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகவுள்ளதாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து விலக வேண்டும் என கமல் முடிவு செய்துவிட்டாராம். இதனால் விஜய் டிவி தரப்பில் கொஞ்சம் கலக்கமாக உள்ளதாம்.

கமலுக்கு பதில் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் கமல், ஒவ்வொரு வாரமும் புத்தகப் பரிந்துரை உட்பட பல வித்தியாசங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால், அவர் பிக் பாஸில் இருந்து விலகினால் ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமையும் என சொல்லப்படுகிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கமல் விலகினால் அவருக்குப் பதிலாக சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல் பங்கேற்க முடியாமல் போனபோது சிம்பு தான் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் பிக் பாஸில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.