»   »  'பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்

'பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் - சுப்பிரமணிய சாமி சண்டை இப்போதைக்கு ஓயாது போலத் தெரிகிறது.

'சு சா (கமல் இப்போது இப்படித்தான் குறிப்பிடுகிறார் சுப்பிரமணியன் சாமியை) வுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, பதில் ட்வீட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கமல் ஹாஸன்.

Kamal Hassan again responses to Su Samy

நேற்று சுப்பிரமணிய சாமி மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கமலை கேவலமாகத் திட்டியிருந்தார். முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள் என்று ட்வீட் போட்டிருந்தார் சு சாமி.

அதற்கு கமல் நேற்று இரவு பதிலளித்திருந்தார்.

அவரது பதில்... "எதிர்த்து வாதம் புரியும் அளவுக்கு எனக்கு ஒரு முதுகெலும்பு இருக்கிறது. அதுவே போதும். தமிழர்களை பொறுக்கி என்று கூறியுள்ளார் சு சா. மகிழ்ச்சி. இனி அவரை நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள்", என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல் சார்... மக்களைத் தூண்டி விடறீங்கன்னு சு சா திரும்ப ஆரம்பிக்கப் போறார்... பாத்து.. சூதானமா ட்வீட் போடுங்க!

English summary
Kamal Hassan says that people would oppose Subramanya Samy who described Tamils as 'Porkis'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil