நிஜமா தான் சொல்றீங்களா?...கமல்–சூர்யா ஒரே படத்தில் இணைகிறார்களா?
சென்னை : கமல்ஹாசன், சூர்யா இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போவதாக வெளியான தகவல் கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் மற்றும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 ம் தேதியான நாளை தியேட்டர்களில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாக உள்ள சூர்யா படம் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

காத்திருக்கும் சூர்யா படங்கள்
இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், அதற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து மலையாள டைரக்டர் இயக்கும் படம் ஒன்றில் சூர்யா நடிக்க போகிறாராம். எதற்கும் துணிந்தவன் படம் மலையாளத்திலும் ரிலீசாவதால் இதன் ப்ரோமோஷனிற்காக சூர்யா கேரளா சென்றுள்ளார்.

மலையாள டைரக்டர் படத்தில் சூர்யா
கேரளாவில் நடந்த எதற்கும் துணிந்தவன் செய்தியாளர்கள் பேசிய சூர்யா, மலையாள டைரக்டர் அமல் நீரத் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதை உறுதி செய்தார். அமல் தன்னிடம் கதை சொன்னதாகவும், விரைவில் இந்த படத்தின் வேலைகள் துவங்கும் என்றும் சூர்யாவே கூறியுள்ளார்.

யார் இந்த அமல் நீரத்
பிரபல மலையாள ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான அமல் நீரத், மலையாளத்தில் பல பிரபலமான படங்களை இயக்கி உள்ளார். காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன், டிரான்ஸ் போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தையும் அவர் தான் இயக்கி உள்ளார்.

கமல்-சூர்யா ஒரே படத்திலா
கமல் மற்றும் சூர்யாவை மனதில் வைத்து ஒரு கதையை உருவாக்கி இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த இரண்டு ஹீரோக்களிடமும் நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் ஓகே சொல்லி விட்டதாக அமல் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் தற்போது சூர்யாவை வைத்து அமல் இயக்க போகும் படம் சூர்யா-கமல் இணையும் படமா அல்லது வேறு கதையா என தெரியவில்லை.

மல்டி ஹீரோ படங்களில் கமல்
ஏற்கனவே கமலின் தேவர்மகன் 2 படத்தில் பல டாப் ஹீரோக்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல், சூர்யா இணையும் படமும் உருவாக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. கமல் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன் என பல ஹீரோக்கள் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











