»   »  விஸ்வரூபம் 2 டீசர் வெளியீட்டுத் தேதியை நான்தான் சொல்வேன்... மீடியா சொல்லக் கூடாது! - கமல்

விஸ்வரூபம் 2 டீசர் வெளியீட்டுத் தேதியை நான்தான் சொல்வேன்... மீடியா சொல்லக் கூடாது! - கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூன் 23-ம் தேதி 'விஸ்வரூபம் 2' ட்ரெய்லர் வெளியாகும் என பரவிய தகவலுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் விஸ்வரூபம் 2 பட வெளியீட்டுத் தேதியை நாங்கள்தான் சொல்வோம்.. மீடியா சொல்லக் கூடாது என்றும் அவர் கமெண்ட் வெளியிட்டுள்ளார்.


'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டிற்குள் 'விஸ்வரூபம் 2' வெளியிடப்படும் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


ஜூன் 23?

ஜூன் 23?

இந்நிலையில், ஜூன் 23-ல் 'விஸ்வரூபம் 2' ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும், தீபாவளிக்கு படம் வெளியாகும் என சமூகவலைதளத்தில் தகவல்கள் வெளியாகின.


கமல் மறுப்பு

கமல் மறுப்பு

இதனை உடனடியாக மறுத்துள்ள கமல், 'விஸ்வரூபம் 2' குறித்த தகவலுக்கு, "விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் குறித்த செய்தி தவறானது. ரசிகர்களின் ஆர்வத்துக்கு இணங்க படத்தின் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் அவ்வப்போது உரிய தகவல்களை வெளியிடும்.


நாங்கள்தான் சொல்வோம்

நாங்கள்தான் சொல்வோம்

விஸ்வரூபம் 2 வெளியீட்டை நாங்கள்தான் உறுதி செய்வோம். விஸ்வரூபம் இந்தி உரிமையும் எங்களிடமே இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.


இழுபறி..

இழுபறி..

மூன்று ஆண்டுகளுக்கு முன், 'விஸ்வரூபம்' படமான போதே 'விஸ்வரூபம் 2' படத்துக்கான காட்சிகளும் படமாக்கப்பட்டன. விஸ்வரூபம் வெற்றியைப் பார்த்ததும் 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால், பண விவகாரத்தால் படத்தின் இறுதிக் கட்டப் பணி இழுபறிக்குள்ளானது.


மீண்டும் கமலிடம்

மீண்டும் கமலிடம்

தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமல்ஹாஸன் திரும்ப வாங்கிக் கொண்டார். படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.


படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இந்தப் படத்துக்காக பாக்கியுள்ள 10 சதவீதப் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்தை முடித்த பிறகே சபாஷ் நாயுடுவைக் கையிலெடுக்கிறார் கமல்.


English summary
Kamal Hassan has denied the release date of Viswaroopam 2 teaser.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil