»   »  'அட யாருப்பா அது, கமல் பேர்ல 'நீள் கவிதை' எழுதறது? தல டென்சனாகுதுல்ல!'

'அட யாருப்பா அது, கமல் பேர்ல 'நீள் கவிதை' எழுதறது? தல டென்சனாகுதுல்ல!'

Posted By:
Subscribe to Oneindia Tamil
தன்னுடைய பெயரில் யாரோ சிலர் நீளமான கவிதை எழுதுவதாகவும், துணிந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

முன்பெல்லாம் மீடியா பக்கம் தன் படங்களுக்காக மட்டும் வந்து போய்க் கொண்டிருந்த கமல் ஹாஸன், ட்விட்டர், பேஸ்புக், யுட்யூப் என சமூக வலைத் தளங்கள் வந்தபிறகு அவற்றைப் பயன்படுத்துவதில் முதலில் நின்றார். குறிப்பாக யுட்யூப், பேஸ்புக்கில் ரொம்ப ஆக்டிவானார். தாமதமாகத்தான் ட்விட்டருக்கு வந்தார். வந்த சில தினங்களில் போதும்பா ட்விட்டர், நான் போறேன்... என்று கிளம்பியவர், என்ன நினைத்தாரோ, மீண்டும் ட்விட்டரில் பிஸியாகிவிட்டார்.

Kamal Hassan denies whatsapp poetry

இப்போதைக்கு தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் ரொம்ப பிஸி கமல்தான். பலர் அவரது ட்விட்டுகளைக் கொண்டாடுகிறார்கள். அதற்கு இணையாக கேலியும் செய்கிறார்கள். என்ன.. இவர் சொல்றது புரியலியே... ஒவ்வொரு வாட்டியும் டிக்ஷ்னரியைத் தேட வைக்கிறாரே என்றெல்லாம் ஓட்டுகிறார்கள்.

ஆனால் கமல் அசரவில்லை.

இப்போது அதிமுக, சு சாமி தவிர, இன்னொரு புதுப் பிரச்சினை அவருக்கு. அதாவது கமல் ஹாஸன் எழுதியதாகக் கூறி ஒரு புரியாத கவிதையை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து வருகிறார்களாம். அதுவும் நீளமான கவிதையாம்.

இதுகுறித்து கமல், இன்று ட்விட்டரில் இப்படிக் கூறியுள்ளார்:

'Whatsappல் நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல.செயதவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்..'

இந்த ட்வீட்டுக்கு வாசகர் ஒருவர் அடித்த கமெண்ட்தான், இந்தக் கட்டுரையின் தலைப்பு!

English summary
In a tweet, Kamal Hassan says that some one has circulated a long poem using his name.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil