»   »  ஒரு வழியாக சின்னத் திரைக்கு வந்தேவிட்டார் கமல் ஹாஸன்!

ஒரு வழியாக சின்னத் திரைக்கு வந்தேவிட்டார் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னத் திரை என்ற பெயரில் தனியார் தொலைக்காட்சிகள் பெருக ஆரம்பித்த போது அவற்றை தமிழ் சினிமா கடுமையாக எதிர்த்தது. அப்போது டிவிக்காகக் குரல் கொடுத்த முதல் பிரபல நடிகர் கமல் ஹாஸன்தான்.

சினிமாவால் சின்னத் திரை வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்று கூறிய அவர், நாளை சினிமா சின்னத் திரைக்குள் சென்றுவிடும் என்றார்.

அது இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது. கமல் ஹாஸனும் சின்னத் திரைக்குள் தனது பிரவேசத்தை ஆரம்பித்துவிட்டார் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்.

நாளை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்குகிறது.

ஹாலிவுட், பாலிவுட்

ஹாலிவுட், பாலிவுட்

நிகழ்ச்சி தொடங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாஸன், "ஹாலிவுட், பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவது சகஜம். அதுபோலத்தான் நானும் இன்று டிவி நிகழ்ச்சி நடத்துகிறேன்.

பெருமை

பெருமை

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவதைப் பெருமையாகக் கருதுகிறேன். இதனால் எனக்கு எந்த சிறுமையும் இல்லை.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

விஸ்வரூபம் 2 பட வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. மீண்டும் சபாஷ் நாயுடு பணிகளைத் தொடங்குகிறேன்.

புதிய படம்

புதிய படம்

விரைவில் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியாகும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

English summary
Kamal Hassan says that he felt proud to make debut in small screen

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil