»   »  கமலஹாசன் வெளியிட்ட 'பயம் ஒரு பயணம்' போஸ்டர்!

கமலஹாசன் வெளியிட்ட 'பயம் ஒரு பயணம்' போஸ்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பயம் ஒரு பயணம் என்ற புதிய த்ரில்லர் படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கமல் ஹாஸன் இன்று வெளியிட்டார்.

எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர் தயாரிப்பில், புதிய இயக்குநர் மணிஷர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பயம் ஒரு பயணம்.'

Kamal Hassan releases Bayam Oru Payanam posters

கமல் நடித்த 'உன்னை போல் ஒருவன்' படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாக சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானதாம்.

திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் கமலஹாசன், 'பயம் ஒரு பயணம் ' படக் குழுவினரை பற்றிக் கூறுகையில், "'டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர். ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. 'உன்னை போல் ஒருவன்' படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்திருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.

Kamal Hassan releases Bayam Oru Payanam posters

சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான 'பயம் ஒரு பயணம் ' படத்தின் ஒரு சில காட்சிகளைக் காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ' பயம் ஒரு பயணம்' படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,' எனக் கூறினார்.

English summary
Actor Kamal Hassan has unveiled the posters of Bayam Oru Payanam thriller movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil