»   »  நான் ஏன் 2.ஓ-வில் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கல தெரியுமா? - கமல் ஹாஸன்

நான் ஏன் 2.ஓ-வில் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கல தெரியுமா? - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக என்னிடம் நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு காரணம் இருக்கிறது என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

இந்தியாவின் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்ற சிறப்போடு ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வருகிறது 2.ஓ.

ஷங்கர்

ஷங்கர்

பெரும் வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இது. எந்திரன் பெயரைப் பயன்படுத்தாமல் 2.ஓ என்ற புதுத் தலைப்பைச் சூட்டியுள்ளார் ஷங்கர்.

லைகா

லைகா

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பணம், லொகேஷன்கள் என எதிலும் சமரசமில்லாமல், ஷங்கர் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படத்தை எடுத்து வருகிறார்கள்.

வில்லன்

வில்லன்

இந்தப் படத்தில் வில்லன் பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் பாகத்தில் வில்லன் வேடத்தில் ரஜினியே நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் ரஜினி விஞ்ஞானியாகவும், சிட்டி ரோபோவாகவும் வருகிறார். ரஜினிக்கு வில்லனாக நடிக்க பெரிய நடிகர்களை அணுகினார் ஷங்கர்.

அர்னால்ட்

அர்னால்ட்

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷ்நெக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதலும் பெற்ற நிலையில், சம்பளம், அர்னால்ட் போட்ட கடும் நிபந்தனைகள் காரணமாக பின்வாங்கினார் ஷங்கர்.

கமல் ஹாஸனிடம்

கமல் ஹாஸனிடம்

அடுத்து கமல் ஹாஸனைத்தான் அணுகினார் ஷங்கர். கமலும் கதை கேட்டுவிட்டு சில நாட்கள் கழித்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். பின்னர்தான் அந்த வேடத்தில் அக்ஷய் குமார் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏன் நடிக்கவில்லை?

ஏன் நடிக்கவில்லை?

சரி.. ஏன் நடிக்கவில்லை கமல்...? வில்லன் என்பதால் மறுத்துவிட்டாரா? என்ற கேள்வி எழுகிறதல்லவா..? அதற்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பதில் இது:

வில்லன் வேடம் என்பதால் மறுக்கவில்லை. ரஜினிக்கும் எனக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் காரணமாகவே நான் நடிக்கவில்லை. நாங்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தவர்கள்தான். நான் ஹீரோ, அவர் வில்லன்... அல்லது அவர் ஹீரோ, நான் கெஸ்ட் ரோல் என்று நடித்தவர்கள்தான்.

நானோ அவரோதான் தயாரிக்க வேண்டும்..

English summary
Why Kamal Hassan hasn't accepted to play villain against Rajini in 2.O? Here is Kamal Hassan's reply for the question.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil