»   »  உடல் தானம் செய்த பத்திரிகையாளர் - நடிகர்... கமல் ஹாஸன் வாழ்த்து!

உடல் தானம் செய்த பத்திரிகையாளர் - நடிகர்... கமல் ஹாஸன் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் பத்திரிகையாளருமான தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல் ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

Kamal Hassan wishes journalist for donating his body

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான 'யோகி' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நாளை (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

இன்று நடிகர் கமல் ஹாஸனை அவரது இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்தார் தேவராஜ். அவரைப் பாராட்டி வாழ்த்தினார் கமல் ஹாஸன்.

English summary
Actor Kamal Hassan has praised journalist - actor Devaraj for his body donation on his 50th birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil