twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முள்ளும் மலரும் இன்றும் பேசப்பட கமல் தான் காரணம்: உண்மையை சொன்ன மகேந்திரன்

    By Siva
    |

    Recommended Video

    Director Mahendran: காலமானார் இயக்குனர் மகேந்திரன்- வீடியோ

    சென்னை: முள்ளும் மலரும் படம் இன்று வரை பேசப்படுவதற்கு கமல் ஹாஸன் தான் காரணம் என்று இயக்குநர் மகேந்திரன் முன்பு தெரிவித்தார்.

    முள்ளும் மலரும் படம் மூலம் தான் மகேந்திரன் இயக்குநர் ஆனார். அந்த படம் அவருக்கு மட்டும் அல்ல ரஜினிகாந்துக்கும் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

    அந்த படம் குறித்து மகேந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

    கனத்த இதயத்துடன் தனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரனுக்கு ரஜினி அஞ்சலி கனத்த இதயத்துடன் தனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரனுக்கு ரஜினி அஞ்சலி

    இயக்குநர்

    இயக்குநர்

    நான் சினிமாவுக்குள் இழுத்து வரப்பட்டவன். மத்தவங்க மாதிரி விரும்பி வந்தவன் இல்லை. அடிக்கடி ஓடிப் போனேன். அப்படி ஒரு நேரத்தில் தான் முதல் படத்தை என்னை இயக்குநராக கட்டாயப்படுத்தி இயக்க வைத்தார்கள்.

    மகா கலைஞன்

    மகா கலைஞன்

    கமல் சார் ஒரு மகா கலைஞன். அப்பொழுது நாங்க சந்தித்து நல்ல சினிமாக்களை பற்றி பேசுவோம். நல்ல சினிமாக்கள் பற்றி அவர் நிறைய டிப்ஸ் கொடுப்பார். எனக்கு தமிழ் சினிமாக்கள் மீது மிகப் பெரிய வெறுப்பு. கடைசியில் திரையுலகில் நிரந்தரமாக இருக்க வேண்டியதாகிவிட்டது.

    பாலுமகேந்திரா

    பாலுமகேந்திரா

    முள்ளும் மலரும் என் முதல் படம். அதை நான் ஆசைப்பட்ட மாதிரி எடுக்க நினைத்தேன். என் டேஸ்டுக்கு ஏற்ப கேமராமேன் கிடைக்கவில்லை. கமல் சாரிடம் போய் சொன்னேன். அவர் தான் பாலுமகேந்திரா சாரை அறிமுகம் செய்து என்னுடன் முள்ளும் மலரும் படத்தில் ஒர்க் பண்ண வச்சார். இன்னைக்கு வரைக்கும் முள்ளும் மலரும் படத்தை பற்றி பேசுகிறார்கள். அதற்கு நான் காரணமே இல்லை. அந்த மகா கலைஞன் தான் காரணம்.

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர்

    படம் முடிந்துவிட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியார், ரொம்ப நல்லவர். அந்த கதைக்கு மிக மிக முக்கியமான, உயிரோட்டமான காட்சியை எடுக்காமல் விட்டிருந்தேன். பேட்ச் ஒர்க்கில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். படத்தை பார்த்த தயாரிப்பாளர் டயலாக்கே இல்லை என்று என்னை திட்டினார், அவருக்கு என் மீது கோபம். பாலுமகேந்திரா மீதும் கோபம். அதனால் அந்த கூடுதல் காட்சியை எடுக்க பணம் தர மாட்டேன் என்றார்.

    கோபம்

    கோபம்

    செந்தாழம் பூவில் பாடலுக்கான லீட் சீன் தான் அது. அந்த பாட்டையே தூக்கிடு என்றார் தயாரிப்பாளர். அந்த பாட்டை தூக்கிவிட்டு, நான் சொன்ன காட்சியை எடுக்காவிட்டால் படமே இல்லை. குறை பிரசவமாக வெளியே வந்து அது மறக்கப்பட்டிருக்கும், நானும் காணாமல் போயிருப்பேன். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் சார் வீட்டிற்கு சென்று அவரிடம் என் நிலையை பற்றி கூறினேன்.

    பைத்தியம்

    பைத்தியம்

    உதவி என்று கூட கேட்கவில்லை. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு என்றேன். உடனே அவர் வேணு செட்டியாரிடம் போய் பேசினார், அவர் எவ்வளவோ பேசியும் தயாரிப்பாளர் பணம் தர மறுத்துவிட்டார். இதையடுத்து செட்டியார் அடம்பிடித்ததை பார்த்த கமல், சரி அந்த காட்சியை எடுக்க நான் பணம் தந்தால் ஏற்பீர்களா என்றதும் அவர் அது உன் பாடு என்றார். மறுநாளே அந்த மகா கலைஞன் சத்யா ஸ்டுடியோவில் அந்த காட்சியை எடுக்க வைத்தார். அதன் பிறகே அந்த படம் முழுமை அடைந்தது. அன்று மட்டும் கமல் சார் உதவி செய்யவில்லை என்றால் இன்று நான் இல்லை. என் வாழ்நாளில் அந்த மாமனிதரை மறக்க மாட்டேன் என்றார் மகேந்திரன்.

    English summary
    Director Mahendran earlier said that it was Kamal Haasan who helped him to make Mullum Malarum to make it a memorable one by providing finance for an important scene.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X