நெஞ்சோடு அணைத்து கொண்டு வந்திருக்கேன்...சஸ்பென்ஸ் வைக்கும் கமல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இது வரை இல்லாத அளவிற்கு 18 பேர் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் அதிகம் தெரியாத முகங்களே போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுவும் நடிகர், பாடகர், மாடலிங், நாட்டுப்புற கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சோஷியல் மீடியா பிரபலம் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
முதல் வாரம் கலகலப்பாக, ஜாலியாக சென்ற நிலையில், போட்டியாளர்கள் தங்களின் கதையை சொல்ல வேண்டும் என சொல்லி சென்டிமென்ட், அழுகையையும் கலந்தார் பிக்பாஸ். தன் கதையை சொல்லி அனைவரின் மனதையும் கவர்ந்த திருநங்கையான நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களால் முதல் வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

15 பேர் நாமினேடட்
மீதமுள்ள 17 போட்டியாளர்களுக்குள் குரூப்பிசம், உரசல், கருத்து வேறுபாடு போன்றவைகள் இருந்து வருகிறது. இதற்கிடையில் வழக்கம் போல் முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லை. இரண்டாவது வாரத்தில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் 15 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். வீட்டு தலைவியான தாமரை மற்றும் பாவனி ரெட்டி மட்டுமே நாமினேட் செய்யப்படவில்லை.

10 பேர் சேவ்
இந்நிலையில் நேற்றைய கமல் வரும் எபிசோட்டில் 10 பேர் சேவ் செய்யப்பட்டனர். மீதமுள்ள அபிஷேக், வருண், சின்னபொண்ணு, நாடியா சாங், மதுமிதா ஆகிய ஐந்து பேரில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். இவர்களில் நாடியா சாங் தான் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று, பின்தங்கி உள்ளதால், அவர் தான் வெளியேற்றப்படுவதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

திக் திக் என்று இருக்கு
இதற்கிடையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல், இவர்கள் ஐந்து பேரில் ஒருவர் இன்று வெளியேற உள்ளார். யார் என தெரிந்து கொள்ள மனது திக் திக் என அடிக்கிறதா. எனக்கும் அப்படி தான் உள்ளது. திக் திக் என்ற சத்தம் வெளியில் வரை கேட்கிறது. யாரை என்பதை நெஞ்சோடு அணைத்து கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா...With your permission என பேசி முடிக்கிறார்.

வெளியேறுகிறாரா நாடியா
நாடியா சாங் தான் வெளியேற உள்ளார் என நெட்டிசன்கள் கணித்து கூறி உள்ளனர். பலர் நாடியாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடைசி நிமிடத்தில் சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் தப்பித்தார்கள் என பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுவரை நடந்ததிலேயே இது தான் ரொம்ப போரான சீசன் என சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

பாவனிக்கு என்னாச்சு
பாவனிக்கு என்ன பிரச்சனை. ஏன் எப்பவும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசிக் கொண்டிருக்கிறார். அழுது, அழுது அனுதாபம் சம்பாதிக்க பார்க்கிறார். சிம்பத்தி சீன் ஒர்க்அவுட் ஆகுதுன்னு ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்கு. திருமணமான அபினய், தன் மீது லவ் ஃபீலிங்கில் இருப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார் என சிலர் பாவனியில் நடவடிக்கை எரிச்சலை தருவதாக கூறி வருகிறார்கள்.

நாடியா ஏன் போகனும்
விஜய் டிவி அக்ஷராவை ப்ரோமோட் பண்றதா சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். அபிஷேக் அப்படி என்ன கிழிச்சுட்டார். நாடியா எவிக்ட் ஆகுற அளவுக்கு என பலர் கேட்டுள்ளனர். அபிஷேக் தான எவிட் ஆக போறதா சொன்னாங்க. அதுகுள்ள நாடியா எப்படி திடீர்ன்னு எவிக்ட் ஆகுறாங்க என பல விதமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











