»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

இனிமேல் ஹிந்திப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கமலஹாசன் கூறினார்.

நடிகர் கமலஹாசன் நடித்த தெனாலி படம் திருவனந்தபுரத்தில் 70 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தெனாலி பட வெற்றிவிழா திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்டது.

அதில் கலந்து கொண்டு பேசிய கமல் கூறியதாவது:

ஹிந்திப்படவுலம் மொத்தமும் கடத்தல்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. நான் இனிமேல் ஹிந்திப் படங்களில் நடிக்க மாட்டேன். ஹிந்திப்படவுலகத்தாருக்கோ,கடத்தல்காரர்களுக்கோ வளைந்து கொடுக்க என்னால் முடியாது. அவர்களின் சர்வாதிகாரத்திற்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது.

பணத்துக்காக எதையும் செய்யும் அவர்களின் முக்கியக் குறிக்கோளும் பணம்தான். அவர்களுடன் மோத நான் தயாரில்லை. இப்போது ரித்திக் க்ரோஷன்நடித்த படத்துக்கு நேபாள நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்கள் நன்றாக ஓடி நல்ல வசூலைப் பெற்றுத் தந்துள்ளன என்றார்கமலஹாசன்.

Read more about: acting hindi kamal movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil