»   »  மீண்டும் இளையராஜாவும் நானும்!- கமல் ஹாஸன்

மீண்டும் இளையராஜாவும் நானும்!- கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் நடிகர் கமல் ஹாஸன். இந்தத் தகவலை வாகா பட இசை வெளியீட்டில் அவரே தெரிவித்தார்.

கமல் ஹாஸன் - இளையராஜா கூட்டணியில் நூறுக்கும் அதிகமான படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளன. இந்தப் படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்தன.

இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் மும்பை எக்ஸ்பிரஸ். அதன் பிறகு வெவ்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் படங்கள் எடுத்தார் கமல்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு

11 ஆண்டுகளுக்குப் பிறகு

கிட்டத்தட்ட பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் ஹாஸனும் இளையராஜாவும் மீண்டும் இணைகிறார்கள். அடுத்தடுத்து புதிய படங்களில் இருவரும் பணியாற்ற உள்ளனர்.

ஸ்ருதி ஹாஸன் - ரம்யா கிருஷ்ணன்

ஸ்ருதி ஹாஸன் - ரம்யா கிருஷ்ணன்

முதலில் கமல் ஹாஸனை வைத்து மலையாள இயக்குநர் ராஜீவ் குமார் இயக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதிஹாஸன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

ஏப்ரல் 29-ல்

ஏப்ரல் 29-ல்

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்கவிழா வரும் ஏப்ரல் 29-ம் தேதியன்று நடக்கிறது.

மருதநாயகம்

மருதநாயகம்

அடுத்ததாக இதே லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் மருதநாயகம் படத்துக்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார்.

English summary
After the gap of 11 years Kamal Hassan is joining with Ilaiyaraaja for his Rajeev Kumar project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil