twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் திட்டமிட்டபடி வெளியாகாததால் கமலுக்கு நஷ்டம் ரூ 30 கோடி!

    By Shankar
    |

    Kamal
    சென்னை: திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கமலஹாசன் ரூ.95 கோடி செலவில் தயாரித்த விஸ்வரூபம் படம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த 25-ந்தேதி திட்டமிட்டப்படி திரைக்கு வரவில்லை.

    தமிழ்நாட்டில் அந்த படத்தை வெளியிட 2 வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் அந்த படம் வெளியானது. ஆனால் முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் அந்த படம் திரையிடப்படுவது முடக்கப்பட்டது.

    கர்நாடகத்தில்...

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் மட்டும் 12 தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்துக்காக முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெங்களூரில் படத்தை திரையிட போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் தடைவிதித்தார்.

    நேற்று மாலை அவர் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். அந்த படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி அவர் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

    கர்நாடகா மாநிலம் பத்ராவதி நகரில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் 2 சமுதாயத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டதால் பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் இன்னமும் தன் முடிவை கூறாமல் இருப்பதாக தெரிகிறது.

    கேரளாவில்...

    கேரளாவில் கடந்த 25-ந்தேதி 82 தியேட்டர் களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால் சில தியேட்டர்களில் அந்த படம் நிறுத்தப்பட்டது.

    மறுநாள் சில இந்து அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த ஆதரவு காரணமாக சில இடங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. என்றாலும் கேரளாவிலும் விஸ்வரூபம் முழுமையான அளவில் வெளியாகவில்லை.

    ஆந்திராவில்...

    கர்நாடகா, கேரளா போலவே ஆந்திராவிலும் கடந்த வெள்ளிக்கிழமை பல தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் ஆந்திராவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் உள்துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டியை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    விஸ்வரூபம் படத்தை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தனர். இதனால் மந்திரி சபீதா விஸ்வரூபத்துக்கு தடைவிதிப்பதாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆந்திராவில் எந்த தியேட்டரிலும் விஸ்வரூபம் பட காட்சிகள் தொடரவில்லை.

    விஸ்வரூபம் படத்துக்காக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த 22-ந் தேதியில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. 25-ந் தேதி ஒருநாள் மட்டுமே அந்த தியேட்டர்களில் விஸ்வரூபம் காட்டப்பட்டது.

    மறுநாள் முதல் விஸ்வரூபத்தை திரையிட முடியாததால் தற்காலிகமாக தண்டுபால்யா போன்ற பழைய படங்களை வாங்கி திரையிட்டுள்ளனர். விஸ்வரூபத்துக்கு தடை நீங்குமா, நீங்காதா என்று தெரியாததால் அந்த தியேட்டர் உரிமையாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    தென் இந்தியாவில் கேரளாவில் உள்ள சில தியேட்டர்கள் வேறு எங்கும் விஸ்வரூபம் திரையிடப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்ட தடை நடவடிக்கை தற்போது வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவில் விஸ்வரூபம் படம் பார்த்துவிட்டு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதைடுத்து மலேசிய நாட்டு அரசு விஸ்வரூபம் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதை மலேசியா வினியோகஸ்தர் ஏ.ராமலிங்கம் உறுதி செய்தார். சனிக்கிழமை முதல் மலேசியாவில் எந்த தியேட்டரிலும் விஸ்வரூபம் படம் திரையிடப்படவில்லை.

    ரூ 30 கோடி இழப்பு...

    விஸ்வரூபம் படம் திரையிடப்பட முடியாமல் போனதால் நடிகர் கமலஹாசன், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி கூறினார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடக வினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர் பிரகாஷ்ரெட்டி தெரிவித்தனர்.

    விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் உலகம் முழுவதும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். தடை காரணமாக படம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    சில நகரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை விட குறைவான தொகையே திரும்ப கிடைத்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    லண்டனில் வரவேற்பு

    ஆனால் அமெரிக்காவில் விஸ்வரூபம் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. கடந்த மூன்று நாட்களில் ரூ 2 கோடி வரை வசூல் கிடைத்ததாக தெரிகிறது.

    லண்டன் தியேட்டர்களில் விஸ்வரூபம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் பிரிட்டிஷ் நகர தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் ரூ.57 லட்சம் வசூல் செய்துள்ளது.

    English summary
    Kamal has incurred a huge loss up to Rs 30 cr due to the ban on Viswaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X