»   »  கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் அரசியலில் இறக்குவாரா கமல்?

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் அரசியலில் இறக்குவாரா கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கண்ணுக்கு தெரியாத எதிரிகளை சமாளிக்க களம் இறங்கும் கமல்..!!

சென்னை: கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இருக்கும் அரசியலில் கமல் ஹாஸன் என்ற ஆளுமை என்ன சாதிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ட்விட்டரில் மட்டும் அல்ல நேரிலும் அரசியல் பேச துணிச்சல் உள்ள தமிழன் என்பதை நிரூபிக்கும் வகையில் அரசியலுக்கு வந்துவிட்டார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

கட்சி பெயர், கொள்கைகளை நாளை மதுரையில் அறிவிக்க உள்ளார்.

அரசியல்

அரசியல்

ஆழம் தெரியாமல் கால் விடும் ஆள் இல்லை கமல் ஹாஸன். அதே சமயம் அரசியலில் கண்ணுக்கு தெரிந்த எதிரிகளை விட தெரியாத எதிரிகளே அதிகம். அப்படி இருக்கும்போது கமல் அரசியலில் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினி

ரஜினி

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார் கமல். மேலும் தனிக்கட்சி துவங்கும் தனது நண்பர் ரஜினிகாந்தையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

தூற்றல்

தூற்றல்

ரஜினியின் அரசியலை பற்றி சந்தேகம் எழுப்பிவிட்டு அவரிடமே வந்து வாழ்த்து பெற்றுச் சென்றுள்ளார் கமல். சரியான நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார் கமல். ரஜினியின் வெற்றியை கெடுக்கும் ப்ராஜெக்டுடன் அரசியலுக்கு வருகிறார் கமல் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கேப்டன்

கேப்டன்

மக்களுக்கு நல்லது செய்து நல்ல பெயர் எடுத்த பிறகு அரசியலுக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை காமெடி பீஸாக்கிவிட்டனர். பலருக்கும் தற்போது தான் அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்பது புரிந்துள்ளது.

டெல்லி

டெல்லி

கமல் அரசியலுக்கு வரும் செய்தி அறிந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்து அவரை சந்தித்து பேசினார். அதிரடியாக அரசியலுக்கு வந்து முதல்வராகி மத்திய அரசை துணிந்து எதிர்க்கிறார் கெஜ்ரிவால். கமலும் அவ்வாறே ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பரமக்குடிக்காரர்

பரமக்குடிக்காரர்

கரடுமுரடான பாதை கொண்ட அரசியல் பயணத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு கமல் வெற்றி காண்பாரா? கமல் எனும் ஆளுமை கண்ணுக்கு தெரியாத எதிரிகளை எப்படி கையாண்டு வெற்றி பெற்று சாதிக்கப் போகிறது என்பதை பார்க்க தமிழக மக்கள் ஆவலாக உள்ளனர். எதுவாக இருந்தாலும் புதிய பயணத்தை துவங்கும் பரமக்குடிக்காரருக்கு வாழ்த்துக்கள்.

English summary
Kamal Haasan is set to start a new chapter in his life tomorrow. The legend who has ruled the film industry is about to start his political journey where he should manage innumerable invisible enemies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil