»   »  10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் இளையராஜா - கமல் ஹாஸன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் இளையராஜா - கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் கமல் ஹாஸன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்த ராஜபார்வை படத்திலிருந்து, 2005-ம் ஆண்டு அவர் தயாரித்து நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் வரை அனைத்துப் படங்களுக்கும் இசை இளையராஜாதான்.

கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா

நடுவில் ஒரு படத்துக்கு (காதலா காதலா) மட்டும் வேறொருவர் இசை. வேறு யாருமல்ல, இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசை. அதாவது ராஜ்கமல் தயாரித்த படங்களுக்கு மட்டும்.

ஜிப்ரான்

ஜிப்ரான்

ஆனால் மும்பை எக்ஸ்பிரசுக்குப் பிறகு இளையராஜாவும் கமல் ஹாஸனும் வேறு எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 நான்கு படங்களுக்கும் ஜிப்ரான்தான் இசை அமைத்தார்.

மீண்டும் இளையராஜா - கமல்

மீண்டும் இளையராஜா - கமல்

இந்த நிலையில் கமல் அடுத்து தயாரித்து நடிக்கும் புதிய படமான அப்பா அம்மா விளையாட்டுக்கு (தெலுங்கு தலைப்பின் தமிழாக்கம் இது. உண்மையில் வேறு தலைப்பு கூட சூட்டப்படலாம்) இளையராஜா இசையமைக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

2005-க்குப் பிறகு இளையராஜாவும் கமல் ஹாஸனும் இணையும் படம் இது என்ற செய்தியே ரசிகர்களை இப்போதே எதிர்ப்பார்க்க வைத்துவிட்டது. படம் குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகவிருக்கிறது.

English summary
Sources say that after 10 years Kamal Hassan joining with Ilaiyaraaja for his untitled movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil