»   »  விருமாண்டிக்கு தொடரும் சோதனை

விருமாண்டிக்கு தொடரும் சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருமாண்டி படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விருமாண்டி படத்தை எடுக்க ஆரம்பித்திலிருந்த கமலுக்கு சோதனைகள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. சண்டியர்என்று முதலில் சூட்டப்பட்ட பெயரை மாற்றக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பிரச்சனையைக்கிளப்பினார்.

பிரச்சனையைப் பெரிதாக்க விரும்பாத கமல், விருமாண்டி என்று தனது படத்துக்குப் பெயர் மாற்றினார். தேனியில்நடைபெறுவதாக இருந்த படப்பிடிப்பு பாதுகாப்பு காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டது.

ரிலீஸ் ஆவதற்குள், ஆடியோ கேசட்டில் இடம் பெற்றிருக்கும் கருமாத்தூர் காட்டுக்குள்ளே என்ற பாடல்தன்னுடையது என்று மதுரையைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர் ஒருவர் அடுத்த பிரச்சனையை எழுப்பினார். படம்ரிலீஸானபோது, அப்பிரச்சனை ஓய்ந்தது.

வன்முறை அதிகமாக இருக்கிறது என்று சிங்கப்பூர் அரசாங்கம் படத்தை வெளியிட தடை விதிக்கப் போவதாய்மிரட்டியது.

இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த சிவாஎன்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில்,

விருமாண்டி படம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், சில காட்சிகள் நீதிமன்றத்தை அவமதிக்கும்விதமாகவும் உள்ளது. குறிப்பிட்ட ஒரு சாதியை மட்டும் உயர்வாகக் காட்டி, சாதிக் கலவரத்தை படம் தூண்டுகிறது.எனவே இப்படத்தை நிறுத்த தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இந்த மனு நாளை மறுதினம் நீதிபதி சுபாஷன் ரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil