»   »  ஸ்யமந்தகமனி.... இதுவும் கமல் ஹாஸன் வச்ச பேருதான்!

ஸ்யமந்தகமனி.... இதுவும் கமல் ஹாஸன் வச்ச பேருதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் தனது நண்பர்களின் குழந்தைகளுக்கு கமல் ஹாஸன் வைக்கிற பெயர்கள் பக்கா சமஸ்கிருதத்தில் அமைந்துவிடுகின்றன.

சில தினங்களுக்கு முன் தன் உதவியாளரும் தூங்காவனம் இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வாவின் மகளுக்கு ஹோஷிகா ம்ரினாளினி என்று பெயர் சூட்டினார்.

Kamal named Shobi master daughter as Syamantakamai

அடுத்து இன்று இன்னொரு பெயர் சூட்டு விழாவில் கமல் ஹாஸன் பங்கேற்றார். இது பிரபல டான்ஸ் மாஸ்டர் ஷோபி - லலிதா தம்பதிகளின் மகளுக்கு நடந்த பெயர் சூட்டு விழா.

இந்தக் குழந்தைக்கு ஸ்யமந்தகமனி அஷ்விகா ( SYAMANTAKAMANI ASHVIKA ) என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதமியும் வந்திருந்தார்.

Kamal named Shobi master daughter as Syamantakamai

இந்தப் பெயரும் பக்கா சமஸ்கிருதம்தான். ஸ்யமந்தகமனி என்றால் சமஸ்கிருதத்தில் ஆபரணம் என்று அர்த்தம். அஷ்விகா என்பது வட மாநிலத்தவர் வணங்கும் பெண் தெய்வமான சந்தோஷி மாதாவைக் குறிக்குமாம்.

இப்படி அரும்பொருள் விளக்கம் சொல்ல வச்சிட்டாரே 'உலகநாயகன்'!

Read more about: kamal, shobi, கமல், ஷோபி
English summary
Kamal Hassan has named dance master Shobi - Lalitha's daughter as Syamatakamani Ashvika.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil