»   »  நல்ல தமிழில் லட்சம் பெயர்களிருக்க, சமஸ்கிருதப் பெயர் சூட்டலாமா 'உலகநாயகன்'?

நல்ல தமிழில் லட்சம் பெயர்களிருக்க, சமஸ்கிருதப் பெயர் சூட்டலாமா 'உலகநாயகன்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன்னிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியவரும் தூங்கா வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வாவின் மகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளார் கமல் ஹாஸன்.

ராஜேஷ் எம் செல்வாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்காக வாழ்த்துத் தெரிவித்த கமல் ஹாஸனிடமே, தன் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ராஜேஷ்.

Kamal names Rajesh's baby girl in Sanskrit

நேற்று கமல் அலுவலகத்துக்கு குழந்தையுடன் சென்றார் ராஜேஷ். குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்ட கமல், 'ஹோஷிகா மிரினாளினி (Hoshika Mrinalini)' என்ற பெயரைச் சூட்டினார்.

இது சமஸ்கிருதப் பெயராகும்.

நல்ல தமிழில் லட்சம் பெயர்கள் இருக்கும்போது, ஒரு தமிழ் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறாரே உலகநாயகன்... வெளியில்தான் தமிழ்ப் பற்றாளர் வேஷமா? என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் கமலை விமர்சித்துள்ளனர்.

English summary
Social network users strongly criticised Kamal Hassan for naming his assistant's baby girl in Sanskrit.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil