முதல் முறையாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன்... இசைவாணி முகத்திற்கு நேராக சொன்ன கமல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தின் இறுதி பகுதியை எட்டி உள்ளது. இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஆறாவது வாரத்தில் மதுமிதா வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Suruthi Periyasamy First video after Elimination | Suruthi BIGG BOSS 5 Tamil

இந்நிலையில் வார இறுதி நாளான நேற்றும், இன்றும் கடந்த வாரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கமல் கேட்டு வருகிறார். பொம்மை டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை பேசி சண்டை போட்டது தொடர்பாக கமல், போட்டியாளர்களை கண்டித்தார்.

முதுகில் குத்தியவர் யார்

முதுகில் குத்தியவர் யார்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 42 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், கடந்த ஆறு வாரங்களில் உங்கள் முதுகில் குத்தியவர் யார் என போட்டியாளர்களிடம் கேட்கிறார் கமல். இதில் நிரூப், அபிநய் ஆகியோர் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள். தொடர்ந்து சிபி மற்றும் அக்ஷரா, கமல் முன்னிலையிலேயே சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இந்த வார கேப்டன்சி

இந்த வார கேப்டன்சி

இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த வாரம் கேப்டன்சி டாஸ்கில் அபிநய் வெற்றி பெற்ற நிலையில், தன்னிடம் இருந்த காயின் பவரை பயன்படுத்தி இசைவாணி தலைவரானார். இது பற்றி இரண்டாவது ப்ரோமோவில் கமல் கேட்கிறார்.

இசைவாணி சரியில்லை

இசைவாணி சரியில்லை

அதில், எவ்வளவு நல்ல கேப்டனாக இருந்தாங்க இசைவாணி நீங்க சொல்லுங்களேன் என ஹவுஸ்மெட்களிடம் கேட்கிறார் கமல். அதற்கு முதல் ஆளாக பதிலளிக்கும் சிபி, கொஞ்சம் தயக்கத்துடனேயே பண்ணிகிட்டு இருந்தாங்க சார் என்றார்.

சரியாக செய்யவில்லை

சரியாக செய்யவில்லை

அடுத்து பேசிய தாமரை, பரிமாறுவதும் ஒரு அன்பாக பண்ணலாம். ஆனால் இந்தா, பிடி, வை என சொன்னார் என்றார். வருண் பேசுகையில், ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவர் நன்றாக செய்ததாக எனக்கு தோன்றவில்லை என்றார். நிரூப் கூறுகையில், இந்த கேப்டன்சி சிறப்பாக செய்தாரா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் நான் சொல்வேன் என்றார்.

வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன்

வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன்

முதல் முறையாக பிக்பாசால் வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் என்றால் அது நீங்க தான் என இசைவாணியிடம் முகத்திற்கு நேராகவே சொல்கிறார் கமல். இதைக் கேட்டு அதிர்ச்சியில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்கிறார் இசைவாணி.

இசைவாணியை வருத்தெடுத்த கமல்

இசைவாணியை வருத்தெடுத்த கமல்

இந்த ப்ரோமோவை பார்த்து, இன்று இசைவாணியை வருத்தெடுக்கிறார் கமல். ராஜு சேவ்ட்னு சொன்னதும் பாவனி கடுப்பாகி விட்டார். அவர் ராஜு மீது பொறாமைபடுகிறார். அவார்ட் ஃபங்ஷன்ல காட்டின கோவத்த இப்போ காமியேன் பார்ப்போம். இசைவாணியோட மைண்ட் வாய்ஸ் - பேசாம பாட்டு மட்டும் பாடிட்டு இருந்திருக்கலாம்.

பொண்ணு பண்ணினா தப்பா

பொண்ணு பண்ணினா தப்பா

ஒரு பையன் போல்டா பேசினா மாஸ், கெத்து அப்டினு சொல்வாங்க. அதுவே ஒரு பொண்ணு போல்டாக பேசினா ஓவர் ஆட்டிட்யூட், டிராமா. ஒரு பொண்ணு கெத்தா ஸ்டிராங்கா இருக்கக் கூடாதா. இசைவாணி மற்றும் தாமரை பேசும் போது கடுப்பாவதாக ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X