»   »  விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு கதி என்ன? - கமல் விளக்கம்

விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு கதி என்ன? - கமல் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் திடீரென அரசியல் களத்தில் குதிக்கப் போவதாகவும் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் பேசி வருகிறார்.

சினிமாவில் அவரது வாய்ப்புகள் குறைந்துவிட்டதால்தான் அரசியல் பிரவேசம் மேற்கொள்கிறார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் அவர் பரபரப்பாக எதையாவது பேசி வருகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கமல் ஹாஸன் அளித்துள்ள விளக்கம்:

Kamal owes to comeplete his movie commitments before political entry

"விஸ்வரூபம்-2 படத்தை முடிக்க வேண்டும். சபாஷ் நாயுடு படத்தையும் முடிக்க வேண்டும். அதை முடிக்காமல் நான் பொதுச்சேவைக்கு போனேன் என்றால் என்னை நம்பி படத்தில் காசு போட்டு இருப்பவர்களெல்லாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே அந்த படங்களை முடித்து விட்டுத்தான் அரசியலுக்கு வருவேன். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன்," என்று கமல் தெரிவித்துள்ளார்.

அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு, "அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது," என்று கூறியுள்ளார் கமல்.

அப்ப மருதநாயகம்?

English summary
Kamal Haasan says that he would finish his cinema commitments before launching new party

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil