»   »  கமலை அரசியலுக்கு வரவேற்கும் 'ஆளப் பொறந்தவரே மவ ராசா...' - இணையத்தில் வைரலாகும் பாடல்!

கமலை அரசியலுக்கு வரவேற்கும் 'ஆளப் பொறந்தவரே மவ ராசா...' - இணையத்தில் வைரலாகும் பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கமல்ஹாசன், தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனது நேரடி அரசியல் பயணத்தை இன்று துவக்கி உள்ளார்.

அப்துல்கலாமின் நினைவிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்திருக்கும் கமல், இன்று மாலை மதுரையில் நடக்கும் மாநாட்டில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை அறிமுகம் செய்கிறார். இந்நிலையில் கமலின் அரசியல் வருகையை வரவேற்று பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

தமிழகத்தில் தற்போது சினிமா நடிகர்களின் அரசியல் பிரவேசம் மீண்டும் தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் என்று ஆளாளுக்கு அரசியலுக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்.

சந்திப்பு

சந்திப்பு

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் அறிவிப்பை வெளியிட்டு அதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்னதாக, கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று மாலை அறிவிக்க இருக்கிறார். அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்தையும் பெற்றிருக்கிறார்.

கட்சி பெயர்

கட்சி பெயர்

இன்று முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் கமல், இன்று மாலை மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது, கட்சியின் கொடியையும், பெயரையும் அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் அரசியல் என்ட்ரி பாடல்

கமல் அரசியல் என்ட்ரி பாடல்

https://www.youtube.com/watch?v=mTi7wGWAs2E கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் விதமாக "வா ராசா... வா ராசா கமலஹாசா... தமிழ்நாட்டை ஆளப் பொறந்தவரே மவ ராசா" என்ற பாடல் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. கண்மணிராஜா என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை திவ்யாநாயர் என்ற பெண் பாடியுள்ளார்.

அதிகாரப்பூர்வ பாடல் இல்லை

அதிகாரப்பூர்வ பாடல் இல்லை

செங்கதிர்வாணன் என்பவர் கமலின் இந்த அரசியல் பயணப் பாடலை எழுதியுள்ளார். கமல் தரப்பில் இந்தப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, ரசிகர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது இந்தப் பாடல், கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kamal Haasan has launched his political journey from Ramanathapuram district. This evening, Kaml will be introduced the name, symbol and flag of the party at Madurai. In this situation, a song has been made to welcome the political entry of Kamal. This song goes viral now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil