நேர்மையாக விளையாடுகிறார்.... ராஜுவை பாராட்டிய கமல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 துவங்கி 20 நாட்கள் கடந்து விட்டது. 18 போட்டியாளர்களில் நமீதா மாரிமுத்து மருத்துவ காரணங்களால் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த எலிமினேஷனில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபரை வெளியேற்றும் நடைமுறைகள் இந்த வாரம் நடைபெற்றது.
இதற்கிடையில் இந்த வார டாஸ்கில் பல விதி மீறல்கள், பார்வையாளர்களை எரிச்சலூட்டும் பல செயல்கள் நடைபெற்றன. இதை கமல் கேட்பாரா என பலர் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், தவறுகளை குறிப்பிட்டு முகத்திற்கு நேராக கமல் கேட்பதாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டன. இவை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன

அபிஷேக் விடாத கமல்
இந்நிலையில் மூன்றாவது வார இறுதி நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று கமல், வந்த உடனேயே கடந்த வார டாஸ்க் பற்றிய பேச்சை துவக்கினார். அதுவும் அபிஷேக்கிடம் இருந்து பேச்சை துவக்கினார். அப்போது தன்னை சரி என காட்டிக் கொள்ள, ராஜு குறை கூறுவது போல் பேச்சை திசை திருப்பினார் அபிஷேக்.

ராஜு நேர்மையா விளையாடுறார்
ஆனால் அப்போது குறுக்கிட்ட கமல், ராஜு நேர்மையாக விளையாடினார். அவர் விளையாடிய விதம், மற்றவர்களுக்காக விளையாடினாலும், ஒரு நிலைக்கு மேல் அதை சரியாக செய்தார். விதிகளை கடைபிடிப்பதில் இருந்தே அனைத்தையும் பின்பற்றுவதிலும் நேர்மையை கடைபிடிக்கிறார். அதை பாராட்டப்பட வேண்டியது என்றார்.

ராஜு ஆர்மி
ராஜுவின் நேர்மை, அனைவரிடமும் உண்மையை வெளிப்படையாக விளக்கி சொல்வது, மற்றவர்களின் சதி வேலையை விளக்குவது போன்ற பல செயல்பாடுகள் ஏற்கனவே ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. ஏராளமானோர் இதை வரவேற்று, பாராட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சீசனில் ராஜுவுக்கென் ரசிகர்கள் கூட்டமும், ஆர்மியும் உருவாக்கி உள்ளனர்.

அபிஷேக்கை வச்சு செய்த கமல்
தொடர்ந்து அபிஷேக்கை நன்றாகவே வச்சு செய்தார் கமல். விடாமல், நிஜமாகவே நீங்க இதற்கு முன் பிக்பாஸ் பார்த்ததில்லை என கேட்டார். பார்த்தில்லை என்றால் எப்படி டாப் 5 ல் வரவேண்டும். எல்லா ப்ரோமோவிலும் வர வேண்டும் என பேசி உள்ளீர்ளே அதனால் கேட்டேன். ப்ரோமோ மட்டும் பார்த்தால் எப்படி இவை அனைத்தும் சரியாக சொல்ல முடியதும். இந்த சீசனின் லாஸ்லியா மதுமிதா என்று வேறு சொன்னீர்களே என்றார்.

இன்ஃப்ளூயன்ஸ் செய்கிறார்
அபிஷேக் வீட்டில் இன்ஃப்ளூயன்ஸ் செய்கிறார் என்பதை நிரூப், ராஜு உள்ளிட்ட அனைவரும் ஒப்புக் கொண்டனர். இதைக் கேட்ட கமல், விளையாட்டின் சுவாரஸ்யதிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என சொல்வது அவரின் ஆர்வத்தை காட்டுகிறது. அதை வரவேற்கிறேன். இருந்தாலும் அதற்கென ஒரு வரையறை உள்ளது. இதை அட்வைசாக சொல்லவில்லை. கண்டிக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











