»   »  அரசியலில் கமலால் ஜெயிக்க முடியாது: அண்ணன் சாருஹாஸன்

அரசியலில் கமலால் ஜெயிக்க முடியாது: அண்ணன் சாருஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமலால் அரசியலில் ஜெயிக்க முடியாது:சாருஹாஸன்-வீடியோ

சென்னை: கமல், ரஜினி ஆகியோர் சேர்ந்து கட்சி துவங்கினாலும் 10 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது என்கிறார் சாருஹாஸன்.

ட்விட்டரில் தமிழக அரசை விமர்சித்து வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்.

புதுக் கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ளார் கமல் ஹாஸன்.

திமுக, அதிமுக

திமுக, அதிமுக

தமிழகத்தில் திமுக, அதிமுக தான் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள கட்சிகள். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு கட்சியை துவங்குவதில் எந்த பலனும் இல்லை என்கிறார் சாருஹாஸன்.

பக்குவம்

பக்குவம்

அரசியலுக்கு வந்தால் கமல் ஹாஸனால் வெற்றி பெற முடியாது. யாராக இருந்தாலும் நடிகன் என்பதை தாண்டி அரசியலுக்கு வர பக்குவம் தேவை. ஜெயலலிதா முதல்வரானாரே என்று கேட்க வேண்டாம் என சாருஹாஸன் தெரிவித்துள்ளார்.

அரசியல்

அரசியல்

ஜெயலலிதா நடிகை என்பதால் மட்டும் அரசியலுக்கு வரவில்லை. நடிகை என்பதை தாண்டியும் அவருக்கு அங்கீகாரம் இருந்தது. கமல், ரஜினி ஆகியோர் சேர்ந்து கட்சி துவங்கினாலும் 10 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது என்கிறார் சாருஹாஸன்.

ஓட்டு

ஓட்டு

கமல் ஹாஸனை போன்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருகிறார். இருவரின் கட்சி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

English summary
Actor Charuhaasan said that even if Kamal and Rajinikanth start a party together, they won't get 10 percent votes in the election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X