கேள்வியா கேட்குறீங்க கேள்வி.. ரம்யாவுக்கு நச்சென பாடம் புகட்டிய கமல்.. இனிமேலாவது அடங்குவாரா!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் எல்லோரையும் கேள்வி மேல் கேள்வி கேட்கும் ரம்யா பாண்டியனுக்கு கமல் நல்ல பாடம் புகட்டினார்.

ஜோக்கர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ரம்யா பாண்டியன். இதில் ஆரம்பத்தில் இருந்தே சிரித்து சிரித்து தனது காரியத்தை சாதித்து வருகிறார்.

குழந்தை டாக்டர்

குழந்தை டாக்டர்

யாரையாவது திட்டணும் என்றாலும் சரி நாமினேட் செய்ய வேண்டும் என்றாலும் சரி சிரித்துக் கொண்டே செய்து விடுவார். அவரது செயலை கமலே பல முறை குழந்தை டாக்டர், ஒரு கையில் பொம்மை ஒரு கையில் ஊசி என கூறியிருக்கிறார்.

என்ன பிரச்சனை என்றாலும்

என்ன பிரச்சனை என்றாலும்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகதான் ரம்யாவின் சுயரூபம் தெரிந்து வருகிறது. என்ன பிரச்சனை என்றாலும் நடுவில் புகுந்து, சம்பந்தப்பட்டவரை கேள்வி கேட்டு வருகிறார்.

பொறுமையாக பேசு

பொறுமையாக பேசு

குறிப்பாக கடந்த வாரம், ஆரி மற்றும் ரியோ பிரச்சனைகளை சந்தித்த போதும் தான் சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று குளிர் காய்ந்தார். பாலாஜி யார் கூட சண்டை போட்டாலும் சரி, பாலாஜியிடம் மட்டும் பொறுமையாக பேசு என்று அட்வைஸ் செய்து வருகிறார்.

சமாளித்த ரமேஷ்

சமாளித்த ரமேஷ்

இதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற கால் டாஸ்க்கிலும், காலரான ரம்யா கால் செண்டர் ஊழியராக இருந்த ஜித்தன் ரமேஷை ஏராளமான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். அவர் கேட்ட கேள்விகளால் நொந்து போனார் ஜித்தன் ரமேஷ். இருந்தாலும் சமாளித்தார்.

ரமேஷின் முகம்

ரமேஷின் முகம்

அவர் கேட்ட கேள்விகளால் மொத்த வீடும் இறுக்கமானது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ரம்யாவை விளாசிவிட்டார் கமல். தொடர்ந்து பேசிய கமல் ரமேஷ ரம்யா சலிச்சுட்டாங்க. அவர் பேசிய பேச்சில் தாடிய தாண்டி ரமேஷின் முகம் தெரிஞ்சுது. ரொம்ப நேரம் தாக்கு பிடிச்சுட்டீங்க ரமேஷ் என்றார்.

நாமினேட் செய்யுங்கள்

நாமினேட் செய்யுங்கள்

மேலும் ரம்யாவை ஹவுஸ்மேட்ஸ்களை நாமினேட் செய்யுமாறு கூறினார். இதனை தொடர்ந்து முதல் நபராக அர்ச்சனாவை நாமினேட் செய்த ரம்யா, அவர் சர்க்காஸ்ட்டிக்கா ஹர்ட் பண்ணிடுவார் என்றார். பாலா இதுவரை ஷிவானி மற்றும் சம்யுக்தாவை நாமினேட் செய்ததில்லை, அவருக்கு கண்ணை மறைக்குது என நாமினேட் செய்வேன் என்றார்.

இப்போ புரியுதா?

இப்போ புரியுதா?

மேலும் ஷிவானி பாலாக்கிட்ட பேசுகிறார். மத்தவங்கக்கிட்ட பேசலாம் என்று அவரை நாமினேட் செய்வேன் என்றார். கேபியை நாமினேட் செய்ய என்ன காரணம் சொல்லலாம் என யோசித்தார் ரம்யா பாண்டியன். இதனைக் பார்த்த கமல் இப்போ புரியுதா கேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு என்று கேட்டார்.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
அடுத்த வாரம் தொடரும்

அடுத்த வாரம் தொடரும்

அதற்கு பதில் சொன்ன, ரம்யா பாண்டியன் இதை புரிய வைக்கவா சார் நாமினேட் செய்ய சொன்னீர்கள் என்று கேட்டு அப்படியே வாயை மூடி சோஃபாவில் அமர்ந்தார். அவரை பார்த்த கமல் அடுத்த வாரம் காலர் டாஸ்க் தொடரும், அப்போது பதில் சொல்ற இடத்துல நீங்க இருப்பீங்க என்று எச்சரித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X