»   »  மோ டீசர்... வெளியிட்டார் கமல் ஹாஸன்!

மோ டீசர்... வெளியிட்டார் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மோ என்ற புதிய படத்தின் டீசரை இன்று வெளியிட்டார் நடிகர் கமல் ஹாஸன்.

மோ என்னும் பெயரில் உருவாகியுள்ள புதிய படத்தில் சுரேஷ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பூஜா தேவாரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

Kamal releases Mo teaser

இவர்களுடன் சூது கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த ராமதாஸ் (முனீஸ்காந்த்), யோகி பாபு, மைம் கோபி, சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

Kamal releases Mo teaser

டபிள்யூ.டி.எப் என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புவன் நல்லான் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விஷ்ணு ஸ்ரீ கே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ‘இனிமே இப்படிதான்' திரைப்படத்தின் இசை அமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளருமான சமீர் டி.சந்தோஷ் இசையமைத்திருக்கிறார்.

Kamal releases Mo teaser

காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். டீசரை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

Kamal releases Mo teaser

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

English summary
Actor Kamal Hassan has released the teaser of Mo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil