கடைசி நாளில் அர்ச்சனாவை வறுத்தெடுத்த கமல்.. ஒவ்வொரு ரியாக்ஷனும் வேற மாதிரி!
சென்னை: ஓபன் நாமினேஷன் தொடர்பாக கார்டன் ஏரியாவில் அமர்ந்து கணக்கு போட்ட அர்ச்சனாவை விளாசிவிட்டார் கமல்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் முதல் முறையாக கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் அர்ச்சனா, ரியோ, ஆரி, அனிதா என 7 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
நாமினேஷன் முடிந்த பிறகு கார்டன் ஏரியா லானில் சோம் மற்றும் ரியோவுடன் பேசிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. அப்போது யார் யாரை நாமினேட் செய்தது என்பது குறித்து ரியோ மற்றும் சோமிடம் பேசினார் அர்ச்சனா.

யார் நம்பர் கேம் ஆடுறாங்க?
அப்போது யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை மறக்காமல் பட்டியலிட்ட அர்ச்சனா, இப்போ தெரியுதா யார் நம்பர் கேம் விளையாடுறாங்க? எங்க குரூப்பிஸம் இருக்கு என்று கேட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அந்த விவகாரத்தை கையில் எடுத்த கமல் அர்ச்சனாவிடம் அது குறித்து கேட்டார்.

நாங்க விளையாடியது இல்லை
அதாவது, அர்ச்சனா நீங்கள் ஒரு புது பர்ஸ்பெக்ட்டிவ் கண்டு பிடிச்சீங்களே ஓபன் நாமினேஷனில் என்று கேட்டார். அதற்கு நம்பர் கேம் பத்தி சொல்றீங்களா சார் என்று கேட்டு தான் சொன்னதை நியாயப்படுத்தினார். மேலும் நாங்க நம்பர் கேம் விளையாடியது இல்லை என்றார்.

கமல் பதில்
மேலும் பாலாஜி, ஷிவானி, ஆஜித் ஆகியோர் என்னை நாமினேட் செய்தார்கள் என்று கூறினார். பாலாஜி ஷிவானி ஒரே காரணத்தை கூறியதால் நம்பர் கேம் என்று நினைக்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய கமல், நம்பர் கேம் நீங்கள் மட்டும்தான் விளையாடுறீங்கன்னு நினைக்காதீங்க.

தாங்க மாட்டீங்க..
அங்கேயும் என மக்களை காண்பித்த கமல் அவங்க நம்பர் கேம் விளையாட ஆரம்பிச்சா, உங்களுடைய தனி பலம் சற்றே நெகிழ்ந்து போயிவிடும் அர்ச்சனாவை எச்சரித்தார். மேலும் வேறு யார் பெயரை சொன்னீர்கள் என்று அர்ச்சனாவிடம் கேட்க, சத்தியமகா ஞாபகம் இல்லை என்று கூறினார்.

அசிங்கப்பட்ட அர்ச்சனா
இதனைக் கேட்ட கமல் முறைத்தப்படியே பார்வையை திருப்பினார். இதனை பார்த்த ரசிகர்கள் கடைசி நாளிலும் அர்ச்சனா அசிங்கப்பட்டு விட்டார் என கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











