25 ஆண்டுகளை கடந்த கமலின் அவ்வை ஷண்முகி...சில சுவாரஸ்ய தகவல்கள்

சென்னை : கமல் பெண் வேடத்தில் கலக்கிய அவ்வை ஷண்முகி, கமலின் திரையுலக பயணத்தில் மிக முக்கிய படங்களில் ஒன்றாகும். மேடை நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்த அவ்வை டிகே ஷண்முகத்திற்கு இந்த படம் அர்ப்பணிக்கப்படுவதாக கமலே கூறி இருந்தார்.

Kamals Avvai Shanmugi completes 25 years of release

1996 ம் ஆண்டு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 7 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. பாக்ஸ் ஆபீசிலும் இந்த படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும் அவ்வை ஷண்முகி படம் பாராட்டுக்களை பெற்றது. பல விருதுகளையும் இந்த படம் பெற்றது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் கமல், ஜெமினி கணேசன், மீனா, நாகேஷ், ஹீரா, மணிவண்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிரேஸி மோகன் திரைக்கதை எழுதி இருந்தார். தேவா இசை அமைத்திருந்தார்.

Mrs.Doubtfire என்ற அமெரிக்க படத்தின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் அவ்வை ஷண்முகம் படத்தின் கதை. 1987 ம் ஆண்டு Anne Fine எழுதிய Allias Madame Doubtfire என்ற நாவலில் இருந்து தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டது. Chris Columbus இயக்கிய இந்த படத்தை Robin Williams தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்தார்.

மிக பிரபலமான ஹாலிவுட் மேக்அப் கலைஞரான மைக்கேல் ஜார்ஜ் வெஸ்ட்மோர் தான் அவ்வை ஷண்முகி படத்தில் கமலுக்கு மேக்அப் போட்டிருந்தார். அவ்வை ஷண்முகி படத்திற்கு கமலுக்கு மேக்அப் போடுவதற்கு மட்டும் அவர் 5 மணிநேரம் எடுத்துக் கொண்டார். வெறும் 5 மணி நேரம் மட்டுமே இந்த மேக்அப் பொருந்தும் வகையிலேயே இந்த மேக்அப் போடப்பட்டது. இந்த படத்தில் கமல் நடித்த ஷண்முகி ரோல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவ்வை ஷண்முகி படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் டைரக்டராக அடியெடுத்து வைத்தார் கமல். Chachi 420 என முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்த படம் பிறகு Stree 420 என மாற்றப்பட்டது. இதில் தபு, அம்ரிஷ் புரி, ஓம் புரி, ஜானி வால்கர், பரேஷ் ராவல், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஃபாத்திமா சனா ஷாயிக் தான் இந்த படத்திலும் கமலின் மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. ருக்கு ருக்கு பாடலை சுஜாதாவுடன் இணைந்து கமலே பாடியிருந்தார். இந்த படத்தின் பாடல்களை வாலி எழுதி இருந்தார். கல்யாணம் கச்சேரி, வேலை வேலை ஆகிய பாடல்களை எஸ்பிபி பாடி இருந்தார். காதலா காதலா பாடலின் ட்யூனை 2000 ல் பாலிவுட்டில் வெளிவந்த Gham Hai Kyon படத்தில் வரும் Hamara dil Aapke paas hai பாடலில் பயன்படுத்தப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X