»   »  எல்லா ஆம்பளைங்களும் இதையே ஆசைப்படாதீங்க: கமல் ஏன் அப்படி சொன்னார்?

எல்லா ஆம்பளைங்களும் இதையே ஆசைப்படாதீங்க: கமல் ஏன் அப்படி சொன்னார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லா ஆம்பளைங்களும் இதையே ஆசைப்படாதீங்க என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் வந்துவிட்டால் பார்வையாளர்களும் சரி, போட்டியாளர்களும் சரி குஷியாகிவிடுகிறார்கள்.

இந்நிலையில் கமலிடம் ஹரிஷ் கூறியதாவது,

மன்னிப்பு

மன்னிப்பு

இந்த பிரச்சாரத்திற்கான உரையாடலை ஆரம்பிக்கும் முன்பு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போன வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தீர்கள். அது ஒரு அருமையான நிகழ்வு. ஆனால் அப்போது நான் இருந்த மனநிலைமையால் அதை என்ஜாய் பண்ண முடியவில்லை.

கன்னம்

கன்னம்

நீங்க என் கன்னத்தை பிடித்து கிள்ளியதை கூட ரசிக்க முடியவில்லை. அதை நினைத்து ஃபீல் பண்ணினேன். அதனால் வெளியே வரும் போது உங்களை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் மட்டும் கொடுக்க வேண்டும்.

வெற்றி

வெற்றி

40 நாட்கள் இருந்ததையே பெரிய வெற்றியாக நினைக்கிறேன். இனியும் கஷ்டங்களை தாண்டி வெற்றியாளராக வர வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் ஆதரவால் தான் இந்த வீட்டில் உள்ளேன். அதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஹரிஷ்.

கமல்

கமல்

ஹரிஷ் தன்னை முத்தமிட ஆசைப்படுவதாக கூறியதை கேட்ட கமல், எல்லா ஆம்பளைங்களும் இதையே ஆசைப்படாதீங்க என்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது சினேகன் கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When Harish Kalyan expressed his desire to hug and kiss Kamal Haasan, the host has given a cute reply.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil